Home
Mobile

அடுத்த OnePlus 5ஜி போன் ரெடி.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மே மாதம் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் சில விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 6 Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (Dimensity 7400) சிப்செட் உடன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

அடுத்த OnePlus 5ஜி போன் ரெடி.. 7000mAh பேட்டரி..  எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.

6.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த OnePlus 5ஜி போன் ரெடி.. 7000mAh பேட்டரி..  எந்த மாடல்?

7000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் ரூ.20,000 அல்லது ரூ.23000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

photos credits: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 6 Lite India launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X