Home
Mobile

Motorola மிரட்டலடி.. மிட்-ரேன்ஜ் விலையில் புது போன்.. 6500mAh பேட்டரி, 50MP SONY கேமரா, IP69, 12GB ரேம்!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஆனது வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று, இந்திய சந்தையில் ஒரு புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (Motorola Edge 70 Pro) மாடல் ஆகும்.

இதற்கிடையில் வெளியீட்டிற்கு முன்னதாக, மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல வகையான முக்கிய அம்சங்கள் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

Motorola மிரட்டலடி.. மிட்-ரேன்ஜ் விலையில் புது போன்.. 6500mAh பேட்டரி!

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ அம்சங்கள்: பிளிப்கார்ட் பக்கத்தின் படி, மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் கொண்ட 6.8-இன்ச் அமோஎல்இடி பேனலை கொண்டிருக்கும். இந்த டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் 7ஐ மூலம் பாதுகாக்கப்படும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H ராணுவத் தர நீடித்துழைப்பு மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68/69 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப் மூலம் இயக்கப்படுகிறது, இது 12ஜிபி வரையிலான LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 90W சார்ஜிங் ஆதரவுடன் ஒரு பெரிய 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஎக்ஸ் உடன் வரும். மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று வருட ஓஎஸ் மேம்படுத்தல்களையும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக, இந்த ஸ்மார்ட்போனில் 4600மிமீ² வேப்பர் சேம்பர் கூலிங் யூனிட்டையும் கொண்டுள்ளது. ஆடியோ பிரியர்களுக்காக, இது டால்பி அட்மாஸ்-டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்களுடன் வரும். கேமராவை பொறுத்தவரை இதில் சோனி LYT-710 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கேமராக்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ விலை: மேற்கண்ட முக்கிய அம்சங்களுடன் சேர்த்து மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3 பேன்டோன் கலர்களில் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது: மார்பிள் ஃபினிஷ் கொண்ட லில்லி ஒயிட், சாட்டின் லக்ஸ் ஃபினிஷ் கொண்ட டீ (க்ரீன்), மற்றும் டெய்லர்டு ஃபேப்ரிக் ஃபினிஷ் கொண்ட டைட்டன் (ப்ளூ).

தற்போது வரை, ​​இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்த எந்தத் தகவலும் இல்லை. ஆனால், முன்னதாக அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 70 மாடலின் அறிமுக விலை ரூ.29,999 ஆக இருந்ததை கருத்தில் கொண்டால், வரவிருக்கும் ப்ரோ மாடலின் விலை ரூ. 40,000 க்கும் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மோட்டோரோலா நிறுவனம், எட்ஜ் 70 ப்ரோ பிளஸ் என்கிற பெயரில் - இதே சீரீஸின் கீழ் - இன்னொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கூறப்படும் ப்ரோ பிளஸ் மாடல் ஆனது, ஸ்டாண்டர்ட் ப்ரோ மாடலிலிருந்து எவ்வாறு வேறுபடும் என்பது குறித்த எந்த தகவல்களும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 70 Pro specifications revealed ahead India Launch on April 22 What Could be the Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X