Home
Mobile

அறிமுகமானது புதிய விவோ 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் புதிய விவோ ஒய்6டி (Vivo Y6t) எனும் ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். ஸ்னாப்டிராகன் சிப்செட், 6500எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது.

விவோ ஒய்6டி அம்சங்கள் (Vivo Y6t specifications): 6.74-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த விவோ ஒய்6டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600×720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அறிமுகமானது புதிய விவோ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) உடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

13எம்பி ரியர் கேமரா உடன் விவோ ஒய்6டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த விவோ ஒய்6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஒய்6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), ஃபேஸ் அன்லாக், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், கிராவிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 209 கிராம் ஆகும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்6டி போனின் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.23,300)-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை CNY 1,899 (இந்திய மதிப்பில் ரூ.26,000) விலையில் வாங்க முடியும். ஃப்ளோயிங் கிளவுட்ஸ் ஒயிட், சன்செட் ப்ளூ மற்றும் பிளாக் நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். சீனாவில் வரும் ஏப்ரல் 27-ம் தேதி இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y6t with 6500mAh battery launched in China: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X