Home
Mobile

நேற்று வரை ஆர்டர் போட்டவங்க லக்கி.. இன்று ஒரே நேரத்தில் 6 VIVO போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு!

விவோ (Vivo) நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது மிட்-ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்களில் மீண்டும் ஒருமுறை விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது. மாடல் மற்றும் வேரியண்ட்டை பொறுத்து, விலைகள் ரூ.4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை மாற்றங்கள் விவோவின் டி, வி, மற்றும் ஒய் சீரிஸ்களில் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன மாடல்கள் விலை உயர்வை பெற்றுள்ளன? மிகப்பெரிய மாற்றம் விவோ டி5எக்ஸ் மாடலில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலையும் இப்போது ரூ.4,000 அதிகரித்துள்ளது. விவோ வி70 மாடலின் ஆரம்ப விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடவே விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 6 VIVO போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு!

ஒய் சீரிஸில் விவோ ஒய்51 ப்ரோ மாடலின் விலையும் அதன் அனைத்து வேரியண்டுகளிலும் ரூ.3,000 உயர்த்தப்பட்டு உள்ளது. விவோ ஒய்400 மற்றும் ஒய்31 5ஜி ஆகிய மாடல்களின் விலைகளும் அதிகரிப்பை சந்தித்துள்ளன. ஆகமொத்தம் 6 விவோ ஸ்மார்ட்போன்களின் விலைகள் ரூ.4000 வரையிலான விலை உயர்வை பெற்றுள்ளன.

1. விவோ டி5எக்ஸ் (Vivo T5x):
6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.18,999 இல் இருந்து ரூ.22,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.20,999 இல் இருந்து ரூ.24,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.22,999 இல் இருந்து ரூ.26,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2. விவோ வி70 எலைட் (Vivo V70 Elite):
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.51,999 இல் இருந்து ரூ.55,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.56,999 இல் இருந்து ரூ.59,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

3. விவோ வி70 (Vivo V70):
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.45,999 இல் இருந்து ரூ.49,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.49,999 இல் இருந்து ரூ.53,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

4. விவோ ஒய்400 (Vivo Y400):
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.25,999 இல் இருந்து ரூ.28,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. ரூ 27,999 இல் இருந்து ரூ.31,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

5. விவோ ஒய்51 ப்ரோ (Vivo Y51 Pro):
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.24,999 இல் இருந்து ரூ.27,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.27,999 இல் இருந்து ரூ.30,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

6. விவோ Y31 5ஜி (Vivo Y31 5G):
4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.18,999 இல் இருந்து ரூ.19,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.20,999 இல் இருந்து ரூ.23,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (புதியது) ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo another price hike mid range smartphones including Vivo T5x Price increases up to Rs 4000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X