Just In
- 7 hrs ago
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- 12 hrs ago
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- 17 hrs ago
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 1 day ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
Don't Miss
- News
தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை!
- Movies
பிசினஸ் வுமனாக மாறிய ராஷ்மிகா.. திடீரென முதலீடு செய்ய என்ன காரணம்?
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
- Sports
ஆரம்பமே இப்படியா??.. கடுப்பான மைதான ஊழியர்கள்.. இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டியில் சோதனை!
- Finance
ரஷ்யாவின் தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்தும் ஜி7 நாடுகள்.. என்ன ஆகும்?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வாட்ஸ்அப் யூசர்கள் பெருமூச்சு! ஐபோனிற்கு வந்து ஒரு வருடம் கழித்து ஆண்ட்ராய்டுக்கு வந்த முக்கிய அம்சம்!
ஒருவழியாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து ஐபோனுக்கு மாறிய மற்றும் மாற விரும்பும் அனைவரும் எதிர்பார்த்த ஒரு வாட்ஸ்அப் அம்சம், ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனுக்கு வந்து சேர்ந்துள்ளது; அடுத்த ஒரு வாரத்தில் அனைவருக்கும் சேரும்!
கடந்த ஆண்டு, கூகுள் மற்றும் வாட்ஸ்அப் யூசர்களுக்கு, ஐஓஎஸ்-இல் இருந்து ஆண்ட்ராய்டுக்கு வாட்ஸ்அப் சாட்களை டிரான்ஸ்பர் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டது அல்லவா? அதே போல தற்போது, ஆப்பிள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு வாட்ஸ்அப் டேட்டாவை போர்ட் செய்யும் ஆதரவை அறிவித்துள்ளன.
இந்த அம்சம் எப்படி? எந்தெந்த டிவைஸ்களில் வேலை செய்யும்? எதையெல்லாம் டிரான்ஸ்பர் செய்ய முடியும்? என்கிற விவரங்களையும், இந்த அம்சத்தின் வழியாக வாட்ஸ்அப் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்வது எப்படி? என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகளையும் அறிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

முதலில் ஐபோன் டூ ஆண்ட்ராய்டு; இப்போது ஆண்ட்ராய்டு டூ ஐபோன்!
இந்த விருப்பம் - வழக்கம் போல - ஆரம்பத்தில் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கும். பின்னர் இது படிப்படியாக அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் - நீங்கள் அதிகபட்சம் ஒரு வாரம் காத்திருக்க நேரலாம்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மார்க் ஜுக்கர்பெர்க்கும் இதுகுறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் "போன்களுக்கு இடையே உங்கள் சாட் ஹிஸ்டரி, போட்டோஸ், வீடியோஸ் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை பாதுகாப்பாக இடம்பெயர்வதோடு சேர்த்து, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு இடையான என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை பராமரிக்கும் திறனையும் வாட்ஸ்அப்பில் சேர்க்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் "இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும். கடந்த ஆண்டு ஐபோன் டூ ஆண்ட்ராய்டு-க்கு போர்ட் ஆகும் வசதியை அறிமுகம் செய்தோம். இப்போது ஆண்ட்ராய்டு டூ ஐபோனிற்கு போர்ட் செய்யும் வசதியையும் சேர்க்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே மிகவும் தாமதம் தான்; இருந்தாலும் பரவாயில்லை!
இந்தியாவில் 450 மில்லியனுக்கும் அதிகமான யூசர்களை கொண்ட வாட்ஸ்அப், குறிப்பிட்ட அம்சத்தை இவ்வளவு தாமதமாக கொண்டு வந்துள்ளதே என்கிற கடுப்புகளை விட, இப்போதாவது கொண்டு வந்ததே என்கிற பெருமூச்சுக்களே அதிகமாக உள்ளன.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் FAQ பக்கத்தின்படி, வாட்ஸ்அப் டேட்டாவை ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு எப்படி மாற்றுவது என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:
- முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக அணுக கிடைக்கும் Move to iOS என்கிற ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். பிறகு உங்கள் புதிய ஐபோனில் உள்ள வாட்ஸ்அப் ஆனது ஐஓஎஸ் வெர்ஷன் 2.22.10.70 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இருப்பதை உறுதிசெய்யவும். அதே போல உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வெர்ஷன் 2.22.7.74 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

புதிய ஐபோன் ஆக இருக்க வேண்டும் அல்லது பேக்டரி ரீசெட் அவசியம்!
- உங்கள் புதிய ஐபோனில் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்திய அதே மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும். மேலும் உங்கள் ஐபோன் பேக்ட்ரி நியூ ஆக இருக்க வேண்டும் அல்லது பேக்டரி செட்டிங்ஸ்-இல் ரீசெட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் இங்கே முக்கியம்.
- வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி, இரண்டு டிவைஸ்களும் ஒரு பவர் சோர்ஸ் உடன் இணைக்கப்பட வேண்டும் மற்றும் ஒரே வைஃபை-யில் கனெக்ட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அல்லது ஆண்ட்ராய்டு டிவைஸ் ஆனது ஐபோனின் ஹாட்ஸ்பாட்டுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
- இப்போது ஆண்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்த 'மூவ் டூ ஐஓஎஸ்' ஆப்பை திறந்து, ஸ்க்ரீனில் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மூவ் டூ ஐஓஎஸ் ஆப் வழியாக டேட்டா டிரான்ஸ்பர் நடப்பது இப்படித்தான்!
- டிரான்ஸ்பர் டேட்டா ஸ்க்ரீனில் 'வாட்ஸ்அப்' என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும். பின் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் 'ஸ்டார்ட்' என்பதை கிளிக் செய்யவும். பிறகு வாட்ஸ்அப், உங்கள் டேட்டாவை எக்ஸ்போர்ட் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் வரை காத்திருக்கவும். டேட்டா தயார் ஆனவுடன் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து நீங்கள் சைன்டு-அவுட் ஆவீர்கள்.
- இப்போது 'மூவ் டூ ஐஓஎஸ்' ஆப்பிற்கு மீண்டும் செல்ல 'நெக்ஸ்ட்' என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து ஐபோனுக்கு டேட்டாவை டிரான்ஸ்பர் செய்ய, 'கன்ட்டினியூ' என்பதை கிளிக் செய்யவும். பின் டிரான்ஸ்பர் முடிந்தது என்கிற உறுதிப்பாடு கிடைக்கும் வரை காத்திருக்கவும்.
- இப்போது ஐபோனில், வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை இன்ஸ்டால் செய்யவும். ஆப்பை திறந்து, அதே மொபைல் நம்பரை கொண்டு லாக்-இன் செய்யவும்.
- பிறகு கேட்கும் போது 'ஸ்டார்ட்' என்பதை கிளிக் செய்து குறிப்பிட்ட டிரான்ஸ்பர் செயல்முறையை முடிக்கவும்; அவ்வளவு தான். இப்போது உங்கள் புதிய டிவைஸில் ஆக்டிவேஷன் செயல்பாடுகளை முடிக்க, உங்கள் வாட்ஸ்அப்பில், பழைய சாட்கள் உங்களுக்காக காத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
எல்லாம் முடிந்ததும் பழைய அக்கவுண்ட்டை டெலிட் செய்ய மறக்காதீர்கள்!
ஏனெனில் வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, யூசர்கள் ஐக்ளவுட் பேக்-அப்பை உருவாக்கும் வரை, டிரான்ஸ்பரின் விளைவாக மாற்றப்பட்ட டேட்டா, க்ளவுட் ஸ்டோரேஜிற்கு செல்லாது. மேலும் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை டெலிட் செய்யாத வரை அல்லது உங்கள் ஸ்மார்ட்போனை பேக்டரி ரீசெட் செய்யாத வரை, குறிப்பிட்ட வாட்ஸ்அப் டேட்டாவானது அங்கேயே தான் இருக்கும்.
உங்கள் விண்டோஸ் பிசி-யில் "மறைந்து இருக்கும்" வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

எதெல்லாம் டிரான்ஸ்பர் ஆகும்? எதெல்லாம் ஆகாது?
இந்த போர்ட்டிங் / டிரான்ஸ்பர் செயல்முறையின் கீழ், தனிப்பட்ட மெசேஜ்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும், ஆனால் பியர்-டு-பியர் பேமெண்ட் மெசேஜ்கள் மற்றும் கால் ஹிஸ்டரி போன்றவைகளை டிரான்ஸ்பர் செய்ய முடியாது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப்பை மட்டுமில்லாமல் ஆப்பிளின் 'மூவ் டூ ஐஓஎஸ்' ஆப் ஆனது, ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வகையான ஃப்ரீ ஆப்களையும் ஐஓஎஸ்-க்கு போர்ட் செய்யும் விருப்பத்தையும் வழங்குகிறது.
இந்த இடத்தில், மூவ் டூ ஐஓஎஸ் ஆப்பை பயன்படுத்தி புதிய ஐபோனை 'செட்டிங் அப்' செய்யும் பட்சத்தில் மட்டுமே, குறிப்பிட்ட வாட்ஸ்அப் போர்ட்டபிலிட்டி அம்சம் அணுக கிடைக்கும் என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம். அதாவது, உங்களிடம் ஏற்கனவே செட்-அப் செய்யப்பட்ட ஐபோன் இருந்தால், ஒரு பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் டேட்டாவை போர்ட் செய்ய முடியாது. இதைச் செய்வதற்கான ஒரே வழி, உங்கள் ஐபோனை மீண்டும் 'க்ளீன்' செய்து, அதை மீண்டும் ஒரு புதிய டிவைஸ் ஆக மாற்றுவதே ஆகும்!
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999