உங்கள் போன் நீரில் விழுந்தால் உடனே எதை செய்ய வேண்டும்.! எதை செய்ய கூடாது.!

|

உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் (smartphone) சாதனத்தை நீங்கள் இறுக்கமாகவும், கவனமாகவும் பிடிக்கவில்லை என்றால், அது எப்போது வேண்டுமானாலும் கை தவறி கீழே விழலாம். உங்கள் கை நழுவி தரையில் விழுந்தால் மொபைல் டிஸ்பிளே (mobile display) சேதாரம் ஆகலாம் அல்லது போனின் பேனலில் (phone panel) ஏதேனும் சிராய்ப்புகள் ஏற்படலாம் அல்லது சில டென்ட்கள் உருவாக்கலாம்.

தண்ணீரில் விழும் போன்கலுக்கு தான் பாதிப்பு இரட்டிப்பாக ஜாஸ்தியா?

தண்ணீரில் விழும் போன்கலுக்கு தான் பாதிப்பு இரட்டிப்பாக ஜாஸ்தியா?

இந்த சேதாரங்களையே நீங்கள் பெரியது என்று நினைப்பீர்கள், ஆனால், தரையில் விழும் போனை விட தண்ணீரில் விழும் போன்கலுக்கு (water damage phones) தான் சேதாரம் ஜாஸ்தி என்று சொன்னால் நம்புவீர்களா? நம்ப முடியலைல.! ஆனா, இது தான் உண்மை.! தரையில் விழும் போன்களுக்கு வெளியில் மட்டும் தான் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் தண்ணீரில் விழும் ஸ்மார்ட்போன் (smartphone) சாதனத்திற்கு ஏற்படும் பாதிப்பு இரட்டிப்பாக இருக்கிறது.

போனின் இன்டெர்னல் பாகங்களை பாதிக்கும் வாட்டர் டேமேஜ் அபாயம்.!

போனின் இன்டெர்னல் பாகங்களை பாதிக்கும் வாட்டர் டேமேஜ் அபாயம்.!

காரணம், கண்டிப்பாக உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்கள் போனில் இருக்கும் சார்ஜிங் போர்ட் (charging port), ஸ்பீக்கர் கிரில் (speaker grill), மைக் ஹோல் (mic hole) போன்ற சிறிய-சிறிய கேப் மூலம் தண்ணீர் போனிற்குள் புகுந்துவிடும்.

இது உள்ளே இருக்கும் பாகங்களை பாதிப்படையச் செய்கிறது. முக்கியமாக, மதர் போர்ட் (mother port) வரை பாதிப்படையச் செய்கிறது. இதனால், உங்களுடைய முழு மொபைலும் டெட் ஸ்டேஜ்ஜிற்கு (mobile dead stage) சென்றுவிடக் கூட வாய்ப்புகள் உள்ளது.

ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

ஸ்மார்ட்போனுக்கு தண்ணீர்ல கண்டமா?

ஸ்மார்ட்போனுக்கு தண்ணீர்ல கண்டமா?

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீர் விழுந்தாலோ அல்லது தண்ணீர் உங்கள் போன் மீது விழுந்தாலோ - நீங்கள் உடனே செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இந்த சூழ்நிலையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்பதனால், இவற்றை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். சரி, வாருங்கள் விஷயத்திற்குச் செல்லலாம்.

இதை மட்டும் செய்யவே கூடாது.! மீறி செஞ்சா உங்க போனின் கதை முடுஞ்சுடும்.!

இதை மட்டும் செய்யவே கூடாது.! மீறி செஞ்சா உங்க போனின் கதை முடுஞ்சுடும்.!

- உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் அதை உடனடியாக நீரில் இருந்து அகற்றவும்.
- போன் அதிக நேரம் நீரில் இருந்தால், பெரிய பாதிப்பை உருவாக்கும்.
- எனவே அவற்றை விரைந்து வெளியில் எடுப்பது சிறப்பானது.
- தண்ணீர் பல்வேறு நுழைவாயில்கள் வழியாக உள்ளே சென்றிருக்கக் கூடும்.
- உங்கள் போனை உடனே ஆஃப் செய்து விட்டு விடுங்கள்.
- உங்கள் போனின் கேப்களில் இருக்கும் நீரை எடுக்க ஊதிவிட வேண்டாம். இதை மட்டும் செய்யவே கூடாது.!

யுவர் ஹானர்.! எனக்கு நீதி வேண்டும்.! கோர்ட்டுக்கே நேரில் வழக்காட வந்த AI ரோபோட்.!யுவர் ஹானர்.! எனக்கு நீதி வேண்டும்.! கோர்ட்டுக்கே நேரில் வழக்காட வந்த AI ரோபோட்.!

போன் தண்ணீரில் விழுந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இது தான்.!

போன் தண்ணீரில் விழுந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இது தான்.!

- போன் கேஸை உடனே அகற்றவும்.
- உங்கள் போனின் பின்புறம் திறக்கும் அம்சத்துடன் இருந்தால், பின் பேனலை கழட்டிவிடுங்கள்.
- பின்புறத்தைத் திறந்து பேட்டரி, சிம் கார்டு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளை அகற்றவும்.
- உங்கள் போனை உலர வைக்க ஒரு துணி அல்லது காகிதங்களை பயன்படுத்தவும்.
- போனை உலர வைக்கும் போது அழுத்தமாகத் தேய்க்க வேண்டாம்.

பதட்டத்தில் 'அழுத்தமாக' இந்த செயல்களை செய்யாதீர்கள்.!

பதட்டத்தில் 'அழுத்தமாக' இந்த செயல்களை செய்யாதீர்கள்.!

- அவ்வாறு செய்தால், எதிர்பாராமல் போனின் உள்ளே அதிக நீரை தள்ளிவிடும்.
- போன் முழுவதுமாக நீரில் மூழ்கியிருந்தால், அதே வெளியே எடுத்தவுடன் வாக்யூம் செய்து நீரை உறிஞ்ச வேண்டும்.
- உங்கள் போனை வெயிலில் காய வைக்க வேண்டாம்.
- உலர்ந்த நிழலான இடத்தில் போனை வைக்கவும்.

ஓ.. இதுனால தான் இந்த போனுக்கு இவ்வளவு டிமாண்ட்-ஆ.! ஒரே கலர்ல வேர்ல்ட் பேமஸ் ஆகிடுச்சே.!ஓ.. இதுனால தான் இந்த போனுக்கு இவ்வளவு டிமாண்ட்-ஆ.! ஒரே கலர்ல வேர்ல்ட் பேமஸ் ஆகிடுச்சே.!

நீரில் விழுந்த போனை அரிசியில் போடலாமா? கூடாதா? மாற்று வழி என்ன?

நீரில் விழுந்த போனை அரிசியில் போடலாமா? கூடாதா? மாற்று வழி என்ன?

- உங்கள் ஃபோன் ஈரமாக இருந்தால் அதை அரிசியில் போட வேண்டும் என்ற ஐடியாவை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
- அப்படி செய்வது மிக சரியான வழி இல்லை.
- இருப்பினும், இந்த முறையை சிலர் பின்பற்றுகின்றனர். ஆனால் நாங்கள் இதை பரிந்துரைக்கவில்லை.
- அதற்கு பதிலாக, சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை முயற்சிக்கவும்.

எவ்வளவு நேரம் கழிந்த பின் உங்கள் போனை ON செய்ய வேண்டும்?

எவ்வளவு நேரம் கழிந்த பின் உங்கள் போனை ON செய்ய வேண்டும்?

- உங்களுக்கு வரும் பார்சல் உள்ளே இந்த ஜெல் பாக்கெட்களை நீங்கள் காண முடியும்.
- இவை தனியாகவும் வாங்க கிடைக்கிறது.
- இவை அரிசியை விட மிகவும் வேகமாக நீரை உறிஞ்சும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பிளாஸ்டிக் ஜிப்-டாப் பையில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை நிரப்பி, அதில் போனை புதைக்கவும்.
- உங்கள் மொபைலை 24-48 மணிநேரம் பையில் வைக்கவும்.

குழந்தைங்க சொல் பேச்சு கேட்கலையா? போன் யூஸ் பண்றாங்களா? அப்போ இதை செய்ங்க.!குழந்தைங்க சொல் பேச்சு கேட்கலையா? போன் யூஸ் பண்றாங்களா? அப்போ இதை செய்ங்க.!

நீரில் விழுந்த போன் ON ஆன பிறகு என்ன செய்ய வேண்டும்?

நீரில் விழுந்த போன் ON ஆன பிறகு என்ன செய்ய வேண்டும்?

- உங்கள் மொபைலை முழுமையாக உலர அனுமதித்த பிறகு, அதை இயக்கவும்.
- அது இப்போதே ஆன் ஆகவில்லை என்றால், அதை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்யவும்.
- போன் ஆன் செய்யப்பட்ட அடுத்த 48 மணி நேரம் அல்லது 1 வாரம் வரை உங்கள் போனை கண்காணிக்கவும்.
வேறு ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது பார்க்கவும்.

Best Mobiles in India

English summary
What to do immediately if your phone falls in water tips 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X