Home
Mobile

மினி போன் மார்க்கெட்டே மிரளுது.. 7500mAh பேட்டரி, IP69K ரேட்டிங் உடன் புதிய OnePlus போன்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (மினி ஸ்மார்ட்போன்) கூடிய விரைவில் சந்தைக்கு வர உள்ளது. அது ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடல் ஆகும். ஒன்பிளஸ் 15டி டிஸ்பிளே மற்றும் ரியர் கேமராக்களை பற்றிய துப்புகளை வழங்கும் பல டீஸர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இந்நிலையில், ஒன்பிளஸ் 15டி பேட்டரி திறன், சார்ஜிங் ஸ்பீட் மற்றும் தூசி - நீர் எதிர்ப்பு ரேட்டிங் குறித்த மற்ற விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. இது லீக்ஸ் அல்ல; ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லி ஜீ லூயிஸ் வழியாக கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். ஆக சீன அறிமுகத்திற்கு பிறகான இந்திய அறிமுகத்தின் போது, ஒன்பிளஸ் 15எஸ் மாடலிலும் நாம் இதே அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

7500mAh பேட்டரி, IP69K ரேட்டிங் உடன் புதிய OnePlus போன்!

அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7500mAh பேட்டரியை கொண்டிருக்கும். கடந்த 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் உள்ள 6,260mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது 7500mAh பேட்டரி உண்மையிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

மேலும் தற்போதுள்ள ஒன்பிளஸ் 15டி மாடலில் 80W பாஸ்ட் சார்ஜிங்கை தான் ஆதரிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனில் 7300mAh பேட்டரி உள்ளது, அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனில் 7400mAh பேட்டரி உள்ளது.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் 7500mAh பேட்டரி ஆனது கிளேசியர் பேட்டரி தொழில்நுட்பத்தை (Glacier Battery Technology) பயன்படுத்துகிறது, இது ஒன்பிளஸ் மற்றும் சிஏடிஎல் (CATL) நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட அதே தொழில்நுட்பம் தான், இது ஏற்கனவே உள்ள சில மாடல்களிலும் உள்ளது.

ஐபி ரேட்டிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது உயர்மட்ட IP66, IP68, IP69, மற்றும் IP69K தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகளை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அளவிலான தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகளை "ஒரே நேரத்தில் ஆதரிக்கும், சந்தையில் உள்ள ஒரே ஸ்மால் ஸ்க்ரீன் பிளாக்ஷிப்" இது தான் என்று என்பதையும் ஒன்பிளஸ் சீனா தலைவர் கூறுகிறார்.

ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது. அதே நேரத்தில் பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் "இதே" IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்ஸ் தான் உள்ளன. முந்தைய டீஸர்கள் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவின் நான்கு பக்கங்களிலும் வெறும் 1.xx மிமீ அளவிலான குறுகிய பெஸல்கள் மட்டுமே இருக்கும் என்று பரிந்துரைக்கின்றன.

முன்னதாக ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் லி ஜீ லுயுஸ் (Li Jie Louis), ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு புதிய LUMO பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். லியின் கூற்றுப்படி, இந்த மேம்படுத்தப்பட்ட சென்சார் ஆனது மேம்படுத்தப்பட்ட நீண்ட தூர புகைப்படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெயிட் காட்சிகளை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னம் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட் கிடைக்கலாம்,

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T 7500mAh Battery IP66 IP68 IP69 IP69K Ratings Confirmed Ahead Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X