பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!

|

முன்னதாக Vivo Y55s 5G ஸ்மார்ட்போனானது 2021 டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிமுகமாகி உள்ள Vivo Y55s 5G (2023) மாடல் அதன் மே்மபட்ட பதிப்பாகும். இரண்டு ஸ்மார்ட்போன்களின் மோனிக்கரும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

விவோ ஒய்55 எஸ் 5ஜி (2023)

விவோ ஒய்55 எஸ் 5ஜி (2023)

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய்55 எஸ் 5ஜி (2023) ஸ்மார்ட்போனானது பெரிய ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 5ஜி இணைப்பு ஆதரவு இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

2021 இல் அறிமுகமான Vivo Y55s 5G

2021 இல் அறிமுகமான Vivo Y55s 5G

2021 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமான Vivo Y55s 5G ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்பட்டது அதேபோல் இதில் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருந்தது என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயம்.

Vivo Y55s 5G (2023) விலை

Vivo Y55s 5G (2023) விலை

Vivo Y55s 5G (2023) விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட் உடன் வெளியாகி இருக்கிறது.

இதில் அடிப்படை வேரியண்ட் ஆக இருக்கும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை NTD 8,490 (தோராயமாக ரூ.21,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை NTD 8,490 (தோராயமாக ரூ.22,700) ஆக இருக்கிறது. இரண்டு போனுக்கும் ரூ.1700 மட்டும் வித்தியமாசம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்தியாவுக்கு எப்போது வரும்?

இந்தியாவுக்கு எப்போது வரும்?

இந்த புதிய ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ப்ளூ மற்றும் ஸ்டார் பிளாக் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. Vivo Y55s 5G (2023) ஸ்மார்ட்போனானது தைவான் நாட்டு சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இன்னும் அங்கு அறிவிக்கப்படவில்லை.

புதிய Vivo Y55s 5G (2023) இந்தியா உட்பட பிற நாட்டு சந்தைக்களில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Vivo Y55s 5G (2023) சிறப்பம்சங்கள்

Vivo Y55s 5G (2023) சிறப்பம்சங்கள்

Vivo Y55s 5G (2023) சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 மூலம் இயங்குகிறது. 5G SA/ NSA ஆதரவு இதில் இருக்கிறது.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2408 × 1080 பிக்சல்கள் தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது. 6ஜிபி ரேம் ஆதரவு இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 12 மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இதில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 50 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆதரவு என டூயல் ரியர் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.

செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 128 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். டூயல் சிம் 5ஜி, 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

கூடுதலாக பாதுகாப்பு அம்சத்துக்கு என Vivo Y55s 5G (2023) ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கிறது. 2021 இல் அறிமுகம் செய்யப்பட்ட பழைய மாடல் போல் இல்லாமல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்வதற்கு என 18வாட்ஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது.

File images

Best Mobiles in India

English summary
Vivo continuously launches midrange phone: Vivo Y55s 5G (2023) Launched With MediaTek Dimensity 700 SoC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X