Home
Mobile

OPPO-க்கு ஓ போடுங்க.. இவ்ளோ கம்மி விலைக்கு 5ஜி, 7000mAh பேட்டரி, IP69, 8GB ரேம்-ஆ.. ஆர்டர் அள்ளுமே!

இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் 5ஜி ஆதரவு, பெரிய 7000mAh பேட்டரி, தரமான IP69 ரேட்டிங்-ஆ என்று ஆச்சரியப்பட வைக்கும் வண்ணம், ஒப்போ (OPPO) நிறுவனமானது வருகிற மார்ச் 9 ஆம் தேதி அன்று இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அது ஒப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள், பிளிப்கார்ட்டில் (Flipkart) உள்ள மைக்ரோசைட் வழியாக ஒவ்வொன்றாக "விவரமாக" வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியாக இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? வெயிட் பண்ணி நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

OPPO-க்கு ஓ போடுங்க.. இவ்ளோ கம்மி விலைக்கு 5ஜி, 7000mAh பேட்டரி, IP69!

ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: பிளிப்காட் மைக்ரோசைட்டின் படி, இது 1125 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது முன்னதாக அறிமுகமமான ஒப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போனில் உள்ள AMOLED டிஸ்பிளேவுடன் ஒப்பிடும் போது - ஒரு படி பின்வாங்குவதை குறிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும். இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும். இது தினசரி மல்டி-டாஸ்கிங்கிற்கு போதுமானதாக இருக்கும்

கேமராக்களை பொறுத்தவரை 50MP ப்ரைமரி கேமரா உள்ளது. இரண்டாம் நிலை கேமரா குறித்த விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை. பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை பேக் செய்யும். இதில் IP69 ரேட்டிங் தூசி மற்றும் நீர் எதிர்ப்புத்திறன் இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

நடுத்தர அளவிலான பிரிவில் பெரிய பேட்டரிகள் கொண்ட தொலைபேசிகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன, மேலும் Realme மற்றும் Honor போன்ற OEMகள் 10,000mAh செல்களை பேக் செய்யும் தொலைபேசிகளை வெளியிடும் போதும், 7,000mAh பேட்டரி தொழில்துறை முழுவதும் சொல்லப்படாத எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம்: முன்னதாக அறிமுகமான ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.17,999 க்கு வந்தது. ஆக புதிய ஒப்போ கே14 5ஜி மாடலானது பெரும்பாலும் ரூ.20,000 க்குள் (ரூ.19,999) என்கிற பட்ஜெட்டில் தான் வரும்.

VERDICT - ஒப்போ கே15 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாமா? இதுவரை வெளிப்படுத்தப்பட்ட அம்சங்கள் அடிப்படையில், ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பேட்டரி திறன் மற்றும் நீடித்து உழைக்கும் அம்சங்களில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. சில ஹார்ட்வேர் அம்சங்கள் பழைய ஒப்போ கே13 5ஜி மாடலை விட மிதமானதாக உள்ளது. இதில் சிப்செட் மற்றும் சார்ஜிங் ஸ்பீடும் அடங்கும்.

இது விலையை "பட்ஜெட்டிற்குள்" வைப்பதற்கான ஒரு முயற்சியாக கூட இருக்கலாம். உண்மையிலேயே இது ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங் காம்பினேஷனை கொடுத்தால் - கண்டிப்பாக இது இந்தியாவில் ஹிட் அடிக்கும். கூடவே ஏற்கனவே ரூ.18,000 - ரூ.20,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ரெட்மி (Redmi), ரியல்மி (Realme) மற்றும் ஐக்யூ (iQOO) போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும்

Best Mobiles in India

English summary
Oppo K14 5G Display Camera Chipset Battery IP Rating Specifications Revealed Launch on March 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X