Home
Mobile

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 7200எம்ஏஎச் பேட்டரி.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் விரைவில் விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5X 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை வெளியாகி உள்ளன.

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5X 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ (MediaTek Dimensity 7400 Turbo) சிப்செட் உடன் புதிய விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையன்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 7200எம்ஏஎச் பேட்டரி.. என்ன விலை?

7200mAh பேட்டரி உடன் இந்த புதிய விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் ரூ.18,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி70 (Vivo V70) போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ வி70 அம்சங்கள் (Vivo V70 specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் விவோ வி70 போன் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

குறிப்பாக 6.59-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் விவோ வி70 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில எச்ஆர் 10 பிளஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அதுவும் ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் விவோ வி70 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி புதிய விவோ போனில் உள்ளது.

அதேபோல் OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 (Sony IMX766) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி ஐஎம்எக்ஸ்882 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய விவோ வி70 ஸ்மார்ட்போன். மேலும் ஆரா லைட் (Aura light), 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளன இந்த போனின் ரியர் கேமராக்கள்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியாகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும்.

புதிய விவோ வி70 போனில் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதி உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 7200எம்ஏஎச் பேட்டரி.. என்ன விலை?

விவோ வி70 ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 194 கிராம் ஆகும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த விவோ வி70 ஸ்மார்ட்போனில் உள்ளன. பேஷன் ரெட் மற்றும் லெமன் எல்லோ லெமன் எல்லோ (Lemon Yellow) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் விவோ வி70 போனின் ஆரம்ப விலை ரூ.45,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo T5X 5G key specifications and price revealed: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X