மார்கெட் காலி.. வெறும் ரூ.13499 க்கு 7000mAh பேட்டரி.. 144Hz டிஸ்பிளே.. 15W சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி83 5ஜி (Realme C83 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மலிவான விலைக்கு 7000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 144Hz டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டை கொடுத்து உள்ளது. இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் பிரீமியம் டிசைனை கொடுப்பதால் ரியல்மி நிறுவனம் தனியிடத்தை பிடித்து இருக்கிறது. இதில் சி சீரிஸ் மாடல்கள் பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி வருகின்றன. இப்போது, அதிக பேட்டரி கேபாசிட்டியுடன் ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் களமிறக்கப்பட்டு உள்ளது. டியூரலிபிட்டியிலும் மிரளவிடும்படி இருக்கிறது.

ரியல்மி சி83 5ஜி அம்சங்கள் (Realme C83 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், பட்ஜெட்டில் கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ பூஸ்ட் (AI Boost), டைனாமிக் ரேம் (Dynamic RAM) போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்து உள்ளது. 13 எம்பி மெயின் கேமராவை இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், வீடியோ கால்கள் & செல்பீகளுக்காக 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. பட்டையை கிளப்பும் டியூரபிலிட்டி கொடுக்க IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸபிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது. மேலும், MIL-STD 810H சர்டிபிகேஷன் கொடுத்து உள்ளது. இது மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,499ஆகவும் இருக்கிறது. 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
7000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளது. பெரிய பேட்டரி கொடுப்பதால், 8.4 எம்எம் தடிமனை கொடுத்து உள்ளது. மேலும், 212 கிராம் எடையை கொடுத்து உள்ளது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ கனெக்டிவிட்டி உள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.3 போன்ற கனெக்டிவிட்டிகள் உள்ளன.
மார்ச் 7ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி (Realme) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ப்ளூமிங் பர்பிள் (Blooming Purple) மற்றும் ஸ்ப்ரவ்டிங் கிரீன் (Sprouting Green) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு புரொடக்சன் வருவதால், கஸ்டமர்களிடையே வரவேற்பு பெறுகிறது.


Click it and Unblock the Notifications








