SALE தெறிக்குது.. ரூ.3000 விலை குறைப்பு.. 8000mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 8000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட்டை கொண்ட டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (TECNO POVA Curve 2 5G) ஸ்மார்ட்போனானது தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி மாடலின் பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 12 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.27,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி மற்றும் இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 2 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹாய்ஓஎஸ் 16 (HiOS 16) கிடைத்து உள்ளது. 2 ஓஎஸ் அப்டேட்களை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. எல்லா ஏஐ 2.0 (ELLA AI 2.0) வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இதை பயன்படுத்தலாம். ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிசைனில் 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 2304Hz PWM டிம்மிங் பிரிகொன்சி கிடைக்கிறது. கர்வ் டிஸ்பிளே மாடலாக இருப்பதால் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப்பை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 2K ரெசொலூஷன் கிடைக்கிறது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 2K ரெசொலூஷன் கொண்ட 13 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது. ஐஆர் சென்சாருடன் (IR Sensor) கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்டெட் சிங்கிள் ஸ்பீக்கர் (Bottom-ported Single Speaker) கிடைக்கிறது, டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கிடைக்கின்றன. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி கொடுத்து உள்ளது. 7.42 எம்எம் தடிமன் மற்றும் 195 கிராம் எடை கொடுத்து உள்ளது. மிஸ்டிக் பர்பிள் (Mystic Purple), ஸ்டார்ம் டைட்டானியம் (Storm Titanium) மற்றும் மெல்டிங் சில்வர் (Melting Silver) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








