Home
Deal of the day

OPPO ஆஃபர்.. ரூ.2,250 தள்ளுபடியில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தில் 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி (OPPO F31 Pro 5G) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.27,999 விலைக்கு கிடைக்கும். மேலும், எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,250 தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.25,749 விலைக்கு இந்த ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

OPPO ஆஃபர்.. ரூ.2,250 தள்ளுபடியில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F31 Pro 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட்டை இந்த ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கிடைக்கிறது. டிடி-ஸ்டார் டிபிளஸ் (DT-Star D+) புரொடெக்சன் கொண்ட 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்து உள்ளது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா கொடுத்து உள்ளது. கேலக்ஸி கோர் 02எம்1பி (Galaxy Core 02M1B) சென்சார் வருகிறது. மேலும், 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. கேலக்ஸி கோர் 32இ2 (Galaxy Core 32E2) கிடைக்கிறது.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இந்த ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளது. மேலும், ஷாக் ரெசிஸ்டன்ட், டிராப் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படிஎம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனை கொடுத்து உள்ளது. 7.96 எம்எம் தடிமன் உள்ளது. 190 கிராம் எடை உள்ளது.

7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை இந்த ஓப்போ எப்31 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மட்டுமல்லாமல், இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. டெசர்ட் கோல்டு (Desert Gold) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Grey) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதிலும் தள்ளுபடி விற்பனை இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F31 Pro 5G With 7000mAh Battery 50MP Camera 12 Percent Discount on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X