Home
Mobile

Samsung சக்கை போடு.. ரூ.14,000 க்கு 6000mAh பேட்டரி.. 6 வருட ஓஎஸ்.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி (Samsung Galaxy M17e 5G) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. நம்ப முடியாத பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 6 வருட ஓஎஸ், 50 எம்பி கேமரா மற்றும் 120Hz டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. இந்த கேலக்ஸி எம்17இ 5ஜி மாடலின் விவரங்கள் இதோ.

வருகிற மார்ச் 17ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. மேலும், பட்ஜெட் விவரங்களும் சாம்சங் தளத்தில் உறுதியாகி உள்ளது. முதலில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கலாம்.

Samsung சக்கை போடு.. ரூ.14,000 க்கு 6000mAh பேட்டரி.. 6 வருட ஓஎஸ்!

சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17e 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஹை-பிரைட்னஸ் மோட் (High Brightness Mode) உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (Octa Core MediaTek Dimensity 6300 5G) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி கொண்டுள்ளது.

மேலும், ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 6 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஒன் யுஐ 8 (One UI 8) கொடுக்கப்பட்டு உள்ளது. சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) கிடைக்கிறது. இதில் டெக்ஸ்ட் சர்ச் (Text Search), இமேஜ் சர்ச் (Image Search) மற்றும் மியூசிக் சர்ச் (Music Search) கிடைக்கிறது.

நவ் பார் (Now Bar) மற்றும் லைவ் நோட்டிபிகேஷன் (Live Notification) போன்ற லேட்டஸ்ட் பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. கிநாக்ஸ் செக்யூரிட்டி (Knox Security) கொடுக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) கிடைத்து உள்ளது. ஒன் டச் கன்ட்ரோல் சப்போர்ட்டை இந்த கேலக்ஸி எம்17இ 5ஜி கொடுத்துள்ளது.

பட்ஜெட் சாம்சங் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி கேமராவானது, செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்து உள்ளது.

6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மட்டுமல்லாமல், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் கிடைப்பதால், 12 5ஜி பேண்ட்களின் கனெக்டிவிட்டியை பெற்று கொள்ளலாம். குயிக் ஷேர் மற்றும் வாய்ஸ் போகஸ் போன்ற பிரத்யேக பீச்சர்களும் இந்த கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

5000mAh பேட்டரி கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்க்கலாம். வைப் வயலெட் (Vibe Violet) மற்றும் பிளிட்ஸ் ப்ளூ (Blitz Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மார்ச் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரூ.14,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, பட்ஜெட் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M17e 5G With 6000mAh Battery To Launch in India on March 17 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X