Home
Mobile

வெச்சான் பாரு iQOO.. 9020mAh பேட்டரி.. 165Hz டிஸ்பிளே.. இது வந்தா மத்தது எல்லாம் காலி.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனத்தின் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ஐக்யூ இசட்11 (iQOO Z11) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த மாடலின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ஐக்யூ இசட்10 (iQOO Z10) ஸ்மார்ட்போனானது, 7300mAh பேட்டரியுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, ஐக்யூ இசட்11எக்ஸ் (iQOO Z11x) வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கிறது. வருகிற மார்ச் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாகவே ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போனின் வெளியீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வெச்சான் பாரு iQOO.. 9020mAh பேட்டரி.. 165Hz டிஸ்பிளே.. மத்தது காலி!

ஆனால், முதலில் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று ஐக்யூ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் ஜிங் செங் உறுதி செய்து உள்ளார். 9020mAh பேட்டரி மற்றும் 165Hz டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்து உள்ளார்.

இந்த பீச்சர்கள் மற்றும் மார்ச் வெளியீடு விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. அதேபோல மார்ச் மாத இறுதி வாரத்தில் இந்த ஐக்யூ இசட்11 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, என்னென்ன பீச்சர்களை இதில் எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ இசட்11 அம்சங்கள் (iQOO Z11 Specifications): ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்செட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் கிடைத்தது. மேலும், மீடியாடெக் டைமன்சிட்டி 8000 (MediaTek Dimensity 8000) சீரிஸ் சிப்செட் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கட்டாயம் கிடைக்கும்.

அதேபோல ஓர்ஜின் ஓஎஸ் (Origin OS) கிடைக்கும். டூயல் ரியர் கேமரா செட்டப் எதிர்பார்க்கலாம். இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கும். மார்ச் வெளியீட்டுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஐக்யூ இசட்10 ஸ்மார்ட்போனானது, இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் வெளியாகியது.

ஐக்யூ இசட்11எக்ஸ் அம்சங்கள் (iQOO Z11x Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ (MediaTek Dimensity 7400 TURBO) சிப்செட்டை இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஓர்ஜின் ஓஎஸ் 6 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 7200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 6 வருட ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது.

மேலும், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) கொண்ட மாடலாகவும் இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் இருக்கிறது. மான்ஸ்டர் கேமிங் மோட் (Monster Gaming Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஏஐ கேம் வாய்ஸ் சேஞ்சர், 4டி கேம் வைப்ரேஷன் மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் உள்ளது.

8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொடுத்து உள்ளது. ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் உள்ளது. இந்தியாவில் வருகிற மார்ச் 12ஆம் தேதி இந்த ஐக்யூ இசட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்க உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11 With 165Hz Display 9020mAh Battery Launching This March Officially Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X