இந்திய மார்க்கெட் அதிர போகுது.. 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போன் சமீபத்தில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6)மூலம் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம.

3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (3nm octa core Snapdragon 8 Gen 5 chip) கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
6.31-இன்ச் எல்டிபிஒ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே வசதி விவோ எக்ஸ்300 எப்இ போனில் உள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1,216×2,640 பிகச்ல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு விவோ எக்ஸ்300 எப்இ போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 6500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 40W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட்சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த புதிய போன்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 6.0, என்எப்சி, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. ரஷ்யாவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனின் விலை RUB 60,124 (இந்திய மதிப்பில் ரூ.70,743)-ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த போன் சற்று குறைவான விலையில் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








