Just In
- 10 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 11 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 11 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 12 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
6G சேவைக்கு மனித உடலில் இருந்து பவர் எடுக்குறீங்களா? ஷாக்கிங் தகவலை சொன்ன விஞ்ஞானிகள்.!
இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரினங்களும், பொருட்களும் சக்தியால் (power) கட்டமைக்கப்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு உண்மை. அப்படி மனித உடலில் (Human body) இருக்கும் சக்தி உங்களது 6G தொலைத்தொடர்பு சாதனங்களை சக்தியூட்ட இனி வரும் காலங்களில் பயன்படுத்தப்படும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே.! அப்படியான ஒரு விசித்திரமான யோசனையை தான் விஞ்ஞானிகள் இப்போது வழியுறுத்தி வருகின்றனர்.

எது.! 6G இயக்க மனித உடலில் இருந்து பவர் எடுக்கப்போறீங்களா?
மாசசுசெட்ஸ் அம்ஹேர்ட்ஸ் பல்கலைக்கழகத்தை (University of Massachusetts Amherst) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதை உண்மை என்று கூறுகின்றனர். அது எப்படி? பார்க்கலாம் வாங்க..
5G தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களே ஆகியுள்ளது. இருப்பினும் உலக நாடுகளில் பல மாதங்கள் முன்னாலிருந்து 5G பயன்பாட்டில் உள்ளது.

5ஜி வந்துடுச்சு.. அடுத்து 6ஜி-க்கு ரெடி ஆகணும்ல.!
5ஜி தொழில்நுட்பம் மக்கள் இடையே மெதுவாகப் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் அடுத்த கட்டமான 6G தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியை உலக நாடுகளில் இருக்கும் பல பல்கலைக்கழகங்கள் தொடங்க ஆரம்பித்து விட்டன.
அந்த வகையில், அமெரிக்காவின் அம்ஹேர்ட்ஸ் (Amherst) மாகாணத்தில் உள்ள மாசசுசெட்ஸ் அம்ஹேர்ட்ஸ் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

எது மனித உடலை ஆண்டனா போல யூஸ் பண்ணப்போறீங்களா?
அந்த ஆய்வறிக்கையின் படி, மனித உடல் ஒரு ஆண்டனா (Antenna) போல செயல்பட்டு 6G தொழில்நுட்பத்தில் இயங்கும் சாதனங்களுக்குச் சக்தி ஊட்டப் பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
5G தொழில்நுட்பத்தைப் போல் இல்லாமல், இந்த 6G தொழில்நுட்பத்திற்கு டேட்டாவை மற்ற பொருட்களுக்குப் பரிமாற்றம் செய்ய LED விளக்கில் இருந்து வரும் ஒளியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விசிப்பில் லைட் கம்யூனிகேஷன் என்றால் என்ன? 6G இதில் தான் இயங்குமா?
இதற்கு விசிப்பில் லைட் கம்யூனிகேஷன் (Visible Light Communication) அதாவது VLC என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியோ அலைவரிசை ஸ்பெக்ட்ரத்தை (Radio Frequency Spectrum) விட, விசிபிள் லைட் ஸ்பெக்ட்ரம் (Visible Light Spectrum) பத்தாயிரம் மடங்கு அதிகம் என்பதால்; இப்போது இருக்கும் பேண்ட்வித் (Bandwidth) கட்டுப்பாடுகள் விசிபிள் லைட்டை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும்பொழுது இருக்காது.

வைஃபை (Wi-Fi) உங்களுக்கு தெரியும்.. லைஃபை (Li-Fi) என்றால் என்னனு தெரியுமா?
இதன் மூலம் பரிமாற்றம் வேகம் அடையும் என்று கூறப்படுகிறது.
ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் மூலம் வரும் வயர்லெஸ் நெட்வொர்க் பரிமாற்றத்தை வைஃபை (Wi-Fi) என்று கூறுவது போல, இந்த விசிபிள் லைட்டை பயன்படுத்தி அறிமுகம் படுத்தவிருக்கும் தகவல் பரிமாற்றத்தை லைஃபை (Li-Fi) என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு LED-யை நொடிக்கு பல மில்லியன் முறை ஆன் மற்றும் ஆஃப் செய்வதன் மூலம் இந்த நெட்வொர்க் பரிமாற்றம் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது.

6G-ல எனர்ஜி லீக் ஆகிறதா? அந்த எனர்ஜிய வேஸ்ட் பண்ண மனசு வரலையா?
மாசசுசெட்ஸ் அம்ஹேர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் கணினி அறிவியல் துறை (Department of Information and Computer Science) பேராசிரியர் ஜிஜியாங் (Jie Xiong) இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
நெட்வொர்க் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் LED-க்களில் இருந்து விசிபிள் லைட்டை தாண்டி ரேடியோ அலைவரிசையும் சிறிதளவு வெளியேறும். இதனை எனர்ஜி லீக் (Energy Leak) அதாவது சக்தி கசிவு என்று குறிப்பிடுவர்.

ஆண்டனா மூலம் கசியும் எனர்ஜியை வளச்சு பிடிக்கப்போறாங்களா?
அப்படி கசியும் ரேடியோ அலைவரிசைகளை ஒரு ஆண்டனா மூலம் சேகரித்து 6G சாதனங்களுக்கு சக்தி ஊட்ட பயன்படுத்தலாம் என்று அந்த ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
இந்த ரேடியோ அலைவரிசையை சேகரிக்கும் ஆண்டனாவாக செம்புகம்பிகள் காயில்களாக சுழற்றப்பட்டுப் பயன்படுத்தப்படும்.
ஆனால், வெறும் கம்பி காயில்களை விட ஏதாவது ஒரு பொருளின் மீது சுற்றிவைக்கப்பட்ட காயில்களுக்கு சக்தி சேகரிக்கும் தன்மை அதிகரிப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

காப்பர் கம்பியை சுற்றி சோதனையா?
தனியாக ஒரு பொருளை வைத்து அதில் கம்பியை சுற்றுவதை விட, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் செம்பு கம்பிகளை காயில்களாக சுற்றினால் பயன்படுத்துவது எளிமையாக இருக்கும் என்று திட்டமிட்ட ஆராய்ச்சியாளர்கள், சுவர்கள், டேப்லெட், போன், மடிக்கணினி போன்ற சாதனங்களில் செம்பு கம்பிகளை சுற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

மனித உடலில் அதிகமாக எனர்ஜி ஈர்க்கப்படுகிறதா?
அதன் முடிவில் சாதாரண பொருட்களை விட மின்னணு சாதனங்களில் செம்பு கம்பிகளைச் சுற்றி வைக்கும் பொழுது கூடுதல் சக்தி சேகரிப்பதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் ஒரு அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பையும் கண்டறிந்துள்ளனர்.
மற்ற பொருட்களில் செம்பு கம்பியை காயில்கலாக சுற்றி வைப்பதை விட மனித உடலில் படும்படி வைக்கும்போது ரேடியோ அலைவரிசைகளை சேகரிக்க அதிக உதவியாக இருப்பது தெரியவந்துள்ளது.

6G ஷாக் அடிக்காமல் இருக்குமா?
இது இன்னும் ஆராய்ச்சி கட்டத்திலே இருக்கும் நிலையில், இவை செயல்பாட்டிற்கு வந்தால் மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.
மனித உடலில் செம்பு காயில்களை ஆபரணங்களாக அணிந்து, அதன் மூலம் சக்தியைச் சேகரித்து எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் 6G சாதனங்களை சக்தி ஊட்டலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவாக உள்ளது.
ஷாக் அடிக்காமல் இருந்தால் செம்பு அணிகலன்களை அணிவதற்கு யாரெல்லாம் ரெடி? உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470