Home
News

BSNL போட்ட ஒரே போடு.. வெறும் ரூ.399 போதும்.. 3300 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. மாதாந்திர வேலிடிட்டி!

டெலிகாம் மார்கெட்டே மிரளும்படியான சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.399 விலை கொண்ட திட்டத்தில் 3300 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 50 எம்பிபிஎஸ் வேகத்தை கொடுத்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் ஸ்பார்க் திட்டத்தின் (BSNL Spark Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் கஸ்டமர்களுக்கு இந்த ஸ்பார்க் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் உண்மையான விலை ரூ.449 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.50 தள்ளுபடி போக கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு ரூ.399 விலையில் டேட்டா, வாய்ஸ் கால்கள் சலுகையை பெற்று கொள்ளலாம். ஆரம்பத்தில் 12 மாதங்கள் வரையில் வேலிடிட்டியை தேர்வு செய்யலாம்.

BSNL போட்ட ஒரே போடு.. வெறும் ரூ.399 போதும்.. 3300 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ. 399 திட்ட விவரங்கள் (BSNL Rs 399 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 50 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். மாதத்துக்கு அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 12 மாதங்களுக்கு வேலிடிட்டி பெறும்பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் 3.3 டிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.

ஒரு மாதத்துக்குள் 3300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டால், அடுத்த மாதம் வரையில் 4 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். இதே பிராட்பேண்ட் கனெக்சன் வழியாக அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை (Unlimited Local & STD Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுத்து உள்ளது.

இதில் ஓடிடி சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இந்த திட்டம் அவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஒருவேளை ஓடிடி சந்தா வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ. 599 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் டேட்டா வேகம் மற்றும் மாதாந்திர லிமிட் அதிகமாக கிடைக்கும். கூடுதலாக பிரீமியம் ஓடிடி ஆப்பின் சந்தாவும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ. 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 75 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. இது முந்தைய திட்டத்தைவிட 25 எம்பிபிஎஸ் வேகம் கூடுதலாக இருக்கிறது. அதேபோல மாதத்துக்கு அதிகபட்சமாக 4000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

முந்தைய திட்டத்தை போல 4 எம்பிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி (JioHotstar OTT) சந்தாவை இந்த பிராட்பேண்ட் திட்டம் கொடுத்து உள்ளது. கூடுதல் ஓடிடி மற்றும் டிவி சேனல்களுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 635 திட்ட விவரங்கள் (BSNL Rs 635 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கும் 75 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். மாதத்துக்கு 2500 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களும் கிடைக்கின்றன.

மேலும், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி மட்டுமல்லாமல், சோனிவில் ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படும். 600+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதற்காக தனியாக கனெக்சன் தேவையில்லை. இந்த டிவி சேனல்கள் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும். இதற்கு டேட்டாவும் தேவையில்லை. நேரடியாக பார்த்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 399 Plan With 50Mbps Speed 3300GB Data Monthly Check BSNL Spark Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X