Home
News

Jio ரூ.349, ரூ.399 கதை முடிஞ்சது.. மாதாந்திரம் ரூ.107 போதும்.. 11 மாத வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ், SMS!

ஜியோ (Jio) நிறுவனத்தின் கீழ், பேஸிக் ஆன திட்டங்கள் ஆக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.349 (டெய்லி 2ஜிபி - 28 நாட்கள்) மற்றும் ரூ.399 (டெய்லி 2.5ஜிபி - 28 நாட்கள்) பிளான்கள் ஆனது டேட்டா நன்மையுடன் வருவதால் மட்டுமே இவ்வளவு விலை அதிகமாகவும், வேலிடிட்டி குறைவாகவும் உள்ளன.

ஒருவேளை உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டுமே உள்ளடக்கிய.. உங்கள் ஜியோ சிம் கார்ட்டை, மலிவான விலைக்கு நீண்ட காலத்திற்கு ஆக்டிவ் ஆக வைத்திருக்க உதவும் திட்டங்கள் போதுமென்றால் - உங்களுக்கு ஒன்றல்ல, 2 ஆப்ஷன்கள் உள்ளன!

Jio ரூ.349, ரூ.399 கதை முடிஞ்சது.. மாதாந்திரம் ரூ.107 போதும்!

முகேஷ் அம்பானி தலைமையிலான இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் பயனர்களுக்கு இரண்டு வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை (Voice only prepaid plans) வழங்குகிறது. டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவிற்கு பிறகு இந்தத் திட்டங்கள், ஜியோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த 2 திட்டங்களில் ஒன்று, வெறும் ரூ.107 என்கிற மாதாந்திர செலவின் கீழ் 11 மாதங்களுக்கான
வேலிடிட்டியை வழங்குகிறது. அது ரூ.1178 திட்டமாகும். இதன் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். அதாவது இது 11 மாதங்கள் செல்லுபடி ஆகும். இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும், ஆனால் எந்த டேட்டா நன்மையும் இருக்காது. இந்த திட்டத்துடன் 3600 எஸ்எம்எஸ் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் சேவை அணுக கிடைக்கிறது. இது தவிர்த்து ரூ.1178 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு கூடுதலாக எந்த பெரிய சலுகையும் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்கு அவசர டேட்டா தேவை ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் மேல் ஒரு டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யலாம்.

ஒருவேளை நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் இன்னும் மலிவான வாய்ஸ் ஒன்லி திட்டத்தை தேடினால், நீங்கள் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ் உடன் வரும் இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. "மீண்டும்" டேட்டா தேவை ஏற்பட்டால் ரூ.448 க்கு மேல் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யலாம்.

VERDICT: இந்த இடத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடக்கம் டேட்டா வவுச்சர் ரூ.19 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டேட்டா வவுச்சர் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ஆனால் 1 நாள் மட்டுமே செல்லுபடியாகும். ஆக ரூ.448 அல்லது ரூ.1178 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு திடீர் டேட்டா தேவை ஏற்பட்டால் - கைவசம் பட்ஜெட் விலையில் ஒரு டேட்டா பேக் தயார் ஆக இருக்கும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டெலிகாம் ஆபரேட்டரும் வைஸ் கால் நன்மையை மட்டுமே வழங்கும் மற்றும் டேட்டா நன்மை இல்லாத ப்ரீபெய்ட் திட்டங்கள் கொண்டிருக்க இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவு கூறுகிறது. ஏனெனில், முன்னதாக டேட்டா நன்மை தேவையில்லாத வாடிக்கையாளர்கள் கூட டேட்டாவுடன் வரும் விலை உயர்ந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதாவது அவர்களுக்கு தேவை இல்ல என்றாலும் கூட, அவர்கள் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் டிராய் உத்தரவிற்கு இணங்கி ஜியோ அறிமுகம் செய்த ரூ.448 மற்றும் ரூ.1178 பிளான்கள் - எந்த கட்டாயத்தை முழுமையாக நீக்கி உள்ளன. உண்மையிலேயே உங்களுக்கு டேட்டா நன்மை தேவை இல்லை என்றால்.. சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க வேண்டியது (வாய்ஸ், எஸ்எம்எஸ்) மட்டுமே முக்கிய தேவை என்றால் - இரண்டில் ஒன்றை கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio SIM Active Voice SMS Only Plans 84 Days and 36 Days Service Validity Rs 448 Rs 1178 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X