Home
News

ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. அடுத்த 60 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 10 ஜிபி டேட்டா.. ரூ.319 க்கு வருது ரீசார்ஜ்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.300 விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை கொடுத்துவரும் நேரத்தில், மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனம் 60 நாட்கள் வேலிடிட்டி கொடுத்து வருகிறது. இதில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகையுடன் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரூ.319 திட்டமானது, அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டம், வாய்ஸ் திட்டமாக கிடைத்தாலும், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுத்துள்ளது. ஆனால், இந்த சலுகைகள் வழக்கம்போல தினசரிக்கு கிடைக்காது. தேவைக்கு ஏற்ப கொடுக்கப்படும். அதாவது, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் 60 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் 10 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும்.

ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. அடுத்த 60 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் ரூ. 319 திட்ட விவரங்கள் (BSNL Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 60 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களின் (Unlimited Local & STD Voice Calls) சலுகை கொடுக்கப்படும். இதே நாட்களுக்கு மொத்தமாகவே 10 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த 10 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, பக்கா ஆப்ஷனாக இருக்கும். மேலும், 300 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இந்த 300 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டி இருக்கும். கூடுதல் டேட்டாவுக்கு டேட்டா வவுச்சர்களை பயன்படுத்தலாம்.

இதேபோல மலிவான விலை கொண்ட திட்டத்தில் தினசரி டேட்டா வேண்டுமனால், 10 நாட்கள் கம்மியான வேலிடிட்டியுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகைகளும் நாளொன்றுக்கு கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): முந்தைய திட்டத்தைவிட 10 நாட்கள் வேலிடிட்டி கம்மியாக இதில் கிடைக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 50 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த 50 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 100 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், முந்தைய திட்டத்தில் கிடைத்த 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையையும் இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களின் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆகவே, 50 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். இதைவிட அதிக வேலிடிட்டி வேண்டுமானால், வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் 80 நாட்களுக்கு வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். ஆனால், விலை கம்மியாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ. 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த சலுகைகளும் கொடுக்கப்படாது. ஆகவே, 80 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்களின் சலுகைகள் மட்டுமே கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 319 Plan 60 Days Validity Unlimited Local STD Calls 10GB Data Check BSNL Voice Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X