டெலிகாம் மார்க்கெட்டில் BSNL இறக்கிய இடி.. மாதம் ரூ.200 க்கு 365 நாள் வேலிடிட்டி.. 2.5GB டேட்டா, வாய்ஸ், SMS!
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) அடுக்கடுக்கான ஆபர்களை அறிவித்து வருகிறது. முன்னதாக இந்நிறுவனம் மார்ச் 31 ஆம் தேதி வரை அணுக கிடைக்கும் ஹோலி ஆபரின் ஒரு பகுதியாக - அதன் ரூ.997 திட்டத்தின் மீது தான் கூடுதலாக 14 நாட்கள் (2 வாரம்) இலவச வேலிடிட்டியை அறிவித்து இருந்தது.
இந்த மூலம் ஏற்கனவே 150 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கியரூ.997 திட்டமானது, இலவசமாக சேர்க்கப்பட்டுள்ள 14 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி உடன் சேர்த்து இப்போது மொத்தம் 164 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது. இதற்கிடையில் மாதாந்திர ரூ.200 செலவில் கிடைக்கும் இன்னொரு லாங் வேலிடிட்டி திட்டம் மீதும் ஹோலி ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது ரூ.2399 பிளான் ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் (1 ஆண்டு) ஆகும். அதாவது இந்த திட்டத்திற்காக நீங்கள் மாதாந்திர செலவு செய்யும் தொகை ரூ.199.90 பைசா மட்டுமே ஆகும். ஏற்கனவே போதுமான டேட்டாவை வழங்கிய இந்த திட்டம் இப்போது ஹோலி ஆபரின் கீழ் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
சுவாரசியமாக ரூ.2399 மீது அறிவிக்கப்பட்டுள்ள ஆபரும் கூட 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அணுக கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.2399 திட்டமானது ஸ்பெஷல் ஹோலி பிளான் ஆக விளம்பரப்படுத்தப்பட்டு, எக்ஸ்ட்ரா டேட்டாவை தொடர்ந்து வழங்கும்.
முன்னதாக இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்கியது. இப்போது (மார்ச் 31 ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு) டெயிலி 2.5ஜிபி டேட்டாவை வழங்கும். அதாவது 365 நாட்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 912.5ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். டேட்டாவை தவிர்த்து இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.
14 நாட்ஜ்கள் எக்ஸ்டரா வேலிடிட்டி கொடுக்கும் பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆக முன்னதாக இது மொத்தம் 300ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்கியது. தற்போது 14 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டியின் கீழ் 28ஜிபி சேர்த்து மொத்தம் 328ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
டேட்டா நன்மையுடன் சேர்த்து இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ஆபர் மீதும் மற்றும் ரூ.997 திட்டத்தின் நன்மைகள் மீதும் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், பிஎஸ்என்எல் ஆப் அல்லது நம்பகமான மற்ற மூன்றாம் தரப்பு ஆப்களின் வழியாக இதை ரீசார்ஜ் செய்யலாம். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஆபர் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்.
ரூ.485 திட்டத்தின் மீதும் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.997 மற்றும் ரூ.2399 மீதான ஹோலி ஆபர்களை போலவே ரூ.485 திட்டத்தின் மீதும் கூட பிஎஸ்என்எல் ஹோலி ஆபரை அறிவித்து உள்ளது. இந்த திட்டம் தற்போது 72 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா நன்மையுடன் சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த ஆபர் முடியும் தேதி - 2026 மார்ச் 31 ஆம் தேதி ஆகும்.


Click it and Unblock the Notifications