Home
News

Airtel, Jio கஸ்டமர்கள் வயிற்றில் பால்.. மாதம் ரூ.145 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. எந்தெந்த திட்டம்?

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களானது, டிராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட வாய்ஸ் ஒன்லி பிளான்களை கொடுத்து வருகிறது. 2 நிறுவனங்களிடமும் 2 வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் உள்ளன.

இதில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்கள் மலிவாக உள்ளன. சொல்லப்போனால், மாதத்துக்கு ரூ.145 செலவிலேயே ஜியோ நிறுவனம் 336 நாட்கள் செல்லுபடியை கொடுத்து உள்ளது. ஏர்டெல்லில் 365 நாட்கள் செல்லுபடியை கிடைக்கிறது. ஆனால், மாத செலவு ரூ.154 ஆக இருக்கிறது.

Airtel Jio கஸ்டமர்கள் வயிற்றில் பால்.. மாதம் ரூ.145 போதும்.. 365 நாள்!

1. ரிலையன்ஸ் ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த வாய்ஸ் ஒன்லி திட்டமானது 336 நாட்கள் செல்லுபடியாகும். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வழங்குகிறது.

இந்த திட்டத்துக்கு மாதாந்திர செலவு ரூ.145ஆக இருக்கிறது. அதாவது, 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு செல்லுபடி வழங்குகிறது. ஆகவே, ஒவ்வொரு 28 நாட்களுக்கு ரூ.145 மட்டுமே செலவாக இருக்கிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை வழங்கி உள்ளது.

ஆனால், ஏர்டெல் நிறுவனத்தின் வாய்ஸ் ஒன்லி திட்டமானது, ஜியோ நிறுவனத்தைவிட கூடுதல் விலைக்கு கிடைக்கிறது. இதற்கு ஏற்ப செல்லுப்படியாகும் காலமும் அதிகமாக இருக்கிறது. அதேபோல கூடுதல் சலுகைகளில் இது கவனம் செலுத்தி இருக்கிறது. அதாவது, அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) உள்ளது.

2. பார்தி ஏர்டெல் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டம்: இது 365 நாட்கள் வரையில் செல்லுபடியாகும் திட்டமாக இருக்கிறது. ஆகவே, 28 நாட்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல். 12 மாதங்கள் முழுவதும் செல்லுபடியை வழங்குகிறது. இதே 12 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

செல்லுபடியாகும் காலம் கூடுதலாக கிடைத்தாலும், எஸ்எம்எஸ் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தின் அணுகல் இலவமாக வழங்கப்பட்டுள்ளது. 12 மாதங்களுக்கு இந்த அணுகல் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த அணுகலில் மதிப்பு ரூ.4,000ஆக உள்ளது. இலவச ஹெலோட்யூன்ஸ் (Hellotunes) வழங்குகிறது.

வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.1748 ப்ரீபெய்ட் திட்டமானது ஏர்டெல்லைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, கம்மியான விலைக்கு திட்டத்தை விரும்பினால், இது சரியாக இருக்கும். வேலிடிட்டி சரியாக 12 மாதங்கள் முழுவதும் வேண்டுமானால், ஏர்டெல் திட்டம் சரியாக இருக்கும்.

ஆனால், விலை சற்று கூடுதலாக இருக்கும். எப்படி பார்த்தாலும் 2 திட்டங்களும் ஒரே மாதிரியான சலுகைகளையே கொடுக்கின்றன. வேலிடிட்டிக்கு ஏற்ப விலையில் மாற்றங்கள் இருக்கின்றன. இருப்பினும், ஏர்டெல்லில் கிடைக்கும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தின் அணுகல் கூடுதலாகவே இருக்கிறது.

இதைவிட மலிவான விலைக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் உள்ளன. ஏர்டெல்லில் ரூ.469 விலைக்கும், ஜியோவில் ரூ.448 விலைக்கும் கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களிலும் 84 நாட்கள் செல்லுபடி கிடைக்கும். இதிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மலிவான விலைக்கு திட்டத்தை கொடுத்துள்ளது.

1. ரிலையன்ஸ் ஜியோ ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்: இது 84 நாட்கள் செல்லுபடி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்களை கொடுத்துள்ளது. ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் அணுகலை கொடுத்துள்ளது. இதில் வேறு சலுகைகள் கொடுக்கப்படவில்லை.

2. பார்தி ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம்: இதிலும் 84 நாட்கள் செல்லுபடி கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்களை வழங்கியுள்ளது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்துக்கான (Adobe Express Premium) இலவச அணுகல் கிடைக்கும். இலவச ஹெலோட்யூன்கள் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1748 Voice Only Prepaid Plan With 336 Days Validity Vs Airtel Voice Only Plan Rs 1849 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X