Home
News

BSNL-ல் சம்பந்தமே இல்லாமல் ஸ்விட்ச் ஆப், அவுட் ஆப் ரேன்ஜ், ஒன்வே ஆடியோ கேட்குதா.. அப்போ இதுதான் காரணம்!

மாத்ருபூமியின் (Mathrubhumi) சமீபத்திய அறிக்கையின் படி, பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited ) ஆனது நாடு முழுவதுமாக.. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை (Indigenously developed 4G technology) சோதித்து பார்க்கும் போது, ​​அதன் சந்தாதாரர்கள் அழைப்பு துண்டிப்புகள் மற்றும் இணைப்பு இடையூறுகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கோட்டை ஆன கேரளா: அழைப்பு துண்டிப்புகள் (Call drops) மற்றும் இணைப்பு இடையூறுகள் (connectivity disruptions) குறித்த புகார்கள்பல பகுதிகளிலிருந்து வந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வலுவான தொலைத்தொடர்பு வட்டமாக பரவலாக கருதப்படும் கேரளாவிலும் இந்த புகார்கள் எழுந்துள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

BSNL-ல் சம்பந்தமே இல்லாமல் ஸ்விட்ச் ஆப், அவுட் ஆப் ரேன்ஜ்! காரணம்?

குறிப்பாக வாய்ஸ் கால்கள் மற்றும் நெட்வொர்க் நிலைத்தன்மையில் தொடர்ச்சியான சிக்கல்களுக்கு மத்தியில், பெரும்பாலான பிஎஸ்என்எல் பயனர்கள் தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களின் சேவைகளுக்கு மாறி வரும் இந்த வேளையில், இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் டெலிகாம் நிறுவனத்திற்கு - நிச்சயம் நல்லது அல்ல.

ஓவர் பில்ட்-அப்? நினைவூட்டும் வண்ணம் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் 2025 இல் பிஎஸ்என்எல் இன் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் தொலைத்தொடர்பு தன்னிறைவுக்கான உந்துதலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் அவர் விவரித்து இருந்தார். பிஎஸ்என்எல் நிறுவனமும் - முழுமையாக உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், அப்படியாக தொடங்கப்பட்ட அமைப்பு ஆனது முற்றிலும் குறைபாடற்றது அல்ல என்பது போல் தெரிகிறது. டெலிகாம் தவர்களில் 4ஜி உபகரணங்கள் நிறுவப்பட்டு தொடர்புடைய உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செயல்பாட்டு குறைபாடுகளை அடையாளம் காண உதவும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாதாரர்கள் மத்தியில் இந்த நெட்வொர்க் சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான புகார்கள்? தேஜாஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) ஆகியவற்றுடன் இணைந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்த சேவை தொகுப்பை உருவாக்கியுள்ளது. பிஎஸ்என்எல் பயனர்களிடமிருந்து வரும் பெரும்பாலான புகார்கள் குரல் இணைப்பு தொடர்பானவையாக உள்ளன

பெறுநரின் ஸ்மார்ட்போன் ஆக்டிவ் ஆக இருக்கும்போது கூட டயல் செய்யப்பட்ட எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாக கூறும் தானியங்கி மெசேஜ்களை கேட்பதாக பல சந்தாதாரர்கள் கூறுகின்றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் - பெறுநரின் போன் ஒலிக்காதபோதும் கூட அழைப்பாளர்கள் ரிங்டோனை கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஒருபக்கம் மட்டும் கேட்கிறது: மேலும் அழைப்புகளின் போது ஒரு வழி ஆடியோ சிக்கலையும் பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதன் கீழ் ஒரு தரப்பினரால் மற்றொரு தரப்பினரை கேட்க முடியவில்லை. வலுவான சிக்னல் கவரேஜ் உள்ள சில பகுதிகளில், சந்தாதாரர்கள் தங்கள் போன்கள் "வரம்பிற்கு வெளியே" காட்டப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

இருப்பினும், வாய்ஸ் கால்களுடன் ஒப்பிடும்போது டேட்டா சேவைகள் ஒப்பீட்டளவில் சீராக செயல்படுவதாக தெரிகிறது. டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த செப்டம்பரில் 5.24 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்தது, அதை தொடர்ந்து அக்டோபரில் 2.69 லட்சமும் நவம்பரில் 4.21 லட்சமும் சேர்ந்தது. இருப்பினும், டிசம்பர் மாத தரவு 2.06 லட்சம் சந்தாதாரர்களின் நிகர சரிவை காட்டியது, இது தற்போதைய நெட்வொர்க் மாற்றத்தின் மத்தியில் சேர்க்கைகளில் மந்தநிலையைக் குறிக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Fort Kerala Facing Call Drop Connectivity Disruption Due To Made in India 4G Technology Test Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X