Home
News

Jio சிம் இருக்கா? தினமும் 3GB டேட்டாவுக்கு உடனே இதை ரீசார்ஜ் பண்ணுங்க.. இதைவிட கம்மியா கிடைக்காது!

ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்கள் தினசரிக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட மலிவான திட்டத்தை பெற விரும்பினால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கும்படி ஜியோ நிறுவனத்திடம் 3 திட்டங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் ஆரம்ப விலை திட்டமாக ஜியோ ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan) இருக்கிறது. இதற்கு அடுத்து ஜியோ ரூ.1199 திட்டம் (Jio Rs 1199 Plan) மற்றும் ஜியோ ரூ. 1799 திட்டம் (Jio Rs 1799 Plan) இருக்கிறது. ஆகவே, மலிவான விலையில் 3 ஜிபி டேட்டாவை பெற ரூ. 499 திட்டத்துக்கு செல்லலாம்.

Jio சிம் இருக்கா? தினமும் 3GB டேட்டாவுக்கு உடனே இதை ரீசார்ஜ் பண்ணுங்க!

ஜியோ ரூ. 449 திட்ட விவரங்கள் (Jio Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது அதிக டேட்டாவுடன் மலிவான விலைக்கு கிடைப்பதால், 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கிறது. இந்த நாட்களில் தினசரிக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 84 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இந்த தினசரி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா கணக்கு இல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இந்த டேட்டாவை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொண்டுள்ளது.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம்போல கிடைக்கின்றன. மேலும், கூடுதல் சலுகைகளை இந்த திட்டம் கொண்டுள்ளது. முதலில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி (JioHotstar Mobile / TV) சந்தா கிடைக்கிறது. இந்த ஓடிடி சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் முடிந்தவுடன் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதை 48 மணி நேரத்துக்குள் செய்தால் மட்டுமே ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவானது, தொடர்ந்து கொடுக்கப்படும். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. 18 மாதங்களுக்கு இலவமாக பயன்படுத்தி கொள்ளும்படி ஜெமினி ப்ரோ திட்டம் (Gemini Pro Plan) கிடைக்கிறது.

இதில் 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட அணுகல்களும் கொடுக்கப்படும். இதைவிட அதிக வேலிடிட்டி கிடைக்க வேண்டுமானால், ஜியோ ரூ.1199 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கும்.

ஆகவே, இதை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு 252 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. 100 எஸ்எம்எஸ்கள், 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார், 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 449 Plan 84GB Data Unlimited Voice Calls 28 Days Validity Check 3GB Daily Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X