Home
News

ஜியோ சிம் இருக்கா? இனி 28 நாட்கள் இல்ல.. 30 நாட்கள் வேலிடிட்டி.. இந்த வேல்யூ திட்டம் பலருக்கு தெரியாது!

ஜியோ நிறுவனத்தில் டாக்டைம் வேல்யூ, 30 நாட்கள் வேலிடிட்டி, 25 ஜிபி டேட்டா போன்ற சலுகைகளுடன் வேல்யூ பிரிவு திட்டம் ஒன்று கொடுக்கப்படுகிறது. இப்படிவொரு ப்ரீபெய்ட் திட்டம் இருப்பது பலருக்கு தெரியாது. இதை எப்படி ரீசார்ஜ் செய்வது? இதில் கிடைக்கும் முழு சலுகைகள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோவில் மலிவு விலை திட்டங்களை பெற வேண்டுமானால், வேல்யூ திட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட திட்டங்கள் கிடைக்கும். அதேபோல லம்ப்-சம் டேட்டா சலுகையுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டங்களும் இருக்கும். இதில் ஜியோ ரூ.365 திட்டம் பலருக்கு தெரியாமல் இருக்கிறது.

ஜியோ சிம் இருக்கா? இனி 28 நாட்கள் இல்ல.. 30 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ 365 திட்ட விவரங்கள் (Jio Rs 365 Plan Details): இதில் 28 நாட்கள் வேலிடிட்டிக்கு பதிலாக 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படாது. மொத்தமாக 25 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டுவிடும். இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

அன்லிமிடட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை (STD Voice Calls) இந்த திட்டம் கொடுத்து உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்து உள்ளது. இந்த சலுகைகள் போக எந்த திட்டங்களிலும் கிடைக்காதபடி 7.47 மதிப்பில் டாக்டைம் வேல்யூ கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோகவும் பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.

ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் (Jio Special Offer) கீழ் இந்த புதிய சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (JioHotstar Mobile / TV Subscription) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு இந்த ஓடிடி சந்தாவை பெற்று கொள்ளலாம். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த கிளவுட் ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா வழியாக 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதில் நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட அணுகல்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு வேல்யூ திட்டம் இருக்கிறது. ரூ.189 விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதில் லம்ப்-சம் டேட்டா, லம்ப்-சம் எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படும். ஆனால், 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படாது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் கிடைக்கும். மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டங்களை எப்படி ரீசார்ஜ் செய்வது?

ஜியோ வெப்சைட்டுக்கு சென்று ப்ரீபெய்ட் திட்டங்கள் விருப்பத்துக்கு செல்லுங்கள். இப்போது இடது புறத்தில் பல்வேறு விருப்பங்கள் இருக்கும். இதில் வேல்யூ விருப்பத்தை தேர்ந்தெடுங்கள். இதில் Affordable Packs விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், போதும் ரூ.365 திட்டம், ரூ.189 திட்டம் தோன்றும். உங்களுக்கு விருப்பமான திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 365 Plan 30 Days Validity 25GB Data Unlimited Local STD Calls 3 Months JioHotstar App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X