Subscribe to Gizbot

இதை கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இஸ்ரோ செய்திருக்க கூடாதா.?

Written By:

கடந்த ஜூலை 16, 2004-ஆம் ஆண்டு நிகழந்த கொடூரமான கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு எந்தவிதமான மறுநினைவூட்டலில் தேவையில்லை என்றே நினைக்கிறன். கிருஷ்ணா ஆங்கில நடுத்தரப் பள்ளியின் முதன்மை பிரிவின்கீழ் பயின்ற 94 மாணவர்களும் அந்த கோர விபத்தில் தங்கள் வகுப்பறையிலேயே இறந்து போயினர்.

இந்த விபத்து நமக்கு பல வகையான சவுக்கடி பாடங்களை தந்தது. அதனை தொடர்ந்து பள்ளியின் தரம், பள்ளி கட்டிடத்தின் தரம், வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை என பல விதிமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டது. ஆனால், இந்த கோர விபத்தின் பிரதான காரணியான 'தீ' சார்ந்த முன்னெச்சரிக்கை பாடங்களை நாம் கற்றோமா.?? புதிய வழிமுறைகளை ஆராய்கிறோமா.?? என்பது கேள்விக்குறி.!

சரி, முடிந்துபோன இந்த சோக கதையை இப்போது எதற்காக நான் மீண்டும் கிண்டுகிறேன்.? காரணம் இருக்கிறது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அற்புதமான புதிய தொழில்நுட்பம்

அற்புதமான புதிய தொழில்நுட்பம்

சமீபத்தில், நமது நாட்டின் பெருமையான, நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் நிறுவனமான இஸ்ரோ ஒரு அற்புதமான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய தகவல் வெளியானது. அதனை பற்றிய விளக்கத்தை படித்து முடித்ததுமே "அடச்சே.. இதை கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இஸ்ரோ செய்திருக்க கூடாதா.?" என்ற எண்ணம் தான் தோன்றியது.

கட்டட கட்டமைப்பு

கட்டட கட்டமைப்பு

செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் மலிவான செலவில் விண்கலத்தை செலுத்திய நிறுவனமான இஸ்ரோ தற்போது கட்டட கட்டமைப்புகளுக்கான ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது.

5-6 டிகிரி செல்சியஸ்

5-6 டிகிரி செல்சியஸ்

இஸ்ரோவின் இந்த புதிய தொழில்நுட்பம் ஆனது புதிய நீர் அடிப்படையிலான தீர்வு கொண்டது. இந்த் தீர்வின் மூலம் கட்டிடங்களின் வெளிப்புறத்தில் வெற்றிகரமாக தீ பற்றா மற்றும் நீர் புகா தளங்களை உருவாக்க முடியும். அது மட்டுமல்ல, இந்த சூத்திரம் மூலம் கட்டிடத்தின் உள்வெப்பநிலையை குறைந்தபட்சம் 5-6 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு குறைக்கவும் முடியும்.

குறைந்த விலை

குறைந்த விலை

செராமிக் பாலிமர் ஹைப்ரிட் அல்லது காஸ்போல் (CASPOL) என அழைக்கப்படும் இந்த தீர்வு பிரபல விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இதை குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டிடங்களில் திறம்பட பயன்படுத்தக்கூடிய குறைந்த விலையிலான ஒரு தீர்வு என்றும் கூறுகின்றனர்.

தற்செயலான தீப்பொறி

தற்செயலான தீப்பொறி

பல்நோக்கு பயன்பாட்டைக் கொண்டிருப்பதால், காஸ்போல், ஒரு உள்கட்டமைப்பு சிக்கல்களுக்கான அனைத்து பருவ தீர்வாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. கட்டடங்களை குளிர்விப்பதற்க்கு மட்டுமின்றி கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு காரணமான தற்செயலான தீப்பொறி போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவும் இது உதவும். மேலும் மழைக்காலத்தில் கசிவுகள் மற்றும் துளைகள் ஆகியவற்றையும் தடுக்கும்.

வழங்க தயாராக உள்ளோம்

வழங்க தயாராக உள்ளோம்

"இதே போன்ற பொருட்களை தயாரிக்கும் துறையில் இருக்கும் திறன்மிக்க மற்றும் ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு காஸ்போல்'ஐ வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். உடன் தொழில்கள் அல்லது தொழிலதிபர்கள் தங்கள் செயல்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், சந்தை மதிப்பீடு, நிதி ஏற்பாடுகள் ஆகியவற்றின் ஏனைய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று இஸ்ரோ கடந்த வாரம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ நம்புகிறது

இஸ்ரோ நம்புகிறது

இந்த தொழில்நுட்பத்தை பிரதான நுகர்வோர் சந்தைக்கு எடுத்துச்செல்ல இஸ்ரோவானது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து முயற்சிக்கிறது. சினிமா அரங்குகள், ஆடிட்டோரியங்கள் மற்றும் மால்கள் போன்ற வர்த்தகத் துறையில் இந்த புதிய தொழில்நுட்பம் நன்றாக வேலை செய்யலாம் என்று இஸ்ரோ நம்புகிறது.

நாம் நம்பலாம்.

நாம் நம்பலாம்.

மிகப்பெரிய அளவிலான பயன்பாட்டு நிலையை அடைந்த பின்னர் இது வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற அனைத்து கட்டிட துறைகளையும் சென்றடையலாம் என்றும் இனியொரு கும்பகோணம் பள்ளி தீவிபத்து நடக்காது என்றும் நாம் நம்பலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
This awesome new tech by ISRO makes buildings fire and water resistant. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot