இலவச சாப்ட்வேர்.! மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென் டிரைவ் கொண்டு வாங்க போதும்.!

சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிலும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இனைந்து மென்பொருள் பயன்பாடு பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வு.

|

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம், வரும் அக்டோபர் 14ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிலும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இனைந்து மென்பொருள் பயன்பாடு பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வு.

இலவச சாப்ட்வேர்.!மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென்டிரைவ் போதும்.!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையத்தின் பயன் மட்டும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கொண்டாட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்று விலக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 முதல் 25 தொழிநுட்ப நிலையகங்கள் அமைக்கப்பட்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மென்பொருள் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் வழி மக்களிடம் மென்பொருள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மென்பொருள் பற்றிய தகவல்களை நேரடியாக அறிஞர்களுடன் இணைந்து புரிந்துகொள்வதற்கான சிறந்த மேடையாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு இந்நிகழ்வு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள, நித்தியானந்தா பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து மென்பொருள்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச சாப்ட்வேர்.!மென்பொருள் சுதந்திர தினம்-வெறும் பென்டிரைவ் போதும்.!

கண்காட்சியில் இடம்பெறும் நிலையங்கள்:
- Distros
- Philosophy
- Text to Speech
- Kaniyam
- 4D Coloring
- Robotics
- Women in Technology
- Blender
- Stellarium, Scratch
- Virus
- Privacy on Android
- Alternatives
- Linux Games
- Wiki & OSM
- IOT
- Self Hosting

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் கணினி வரை, நமக்குத் தெரியாமலே நம்மைப் பற்றிய தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் சேகரித்து, அதன் மூலம் அதிக லாபத்தைப் பெற்று வருகின்றது. இதனைத் தடுக்கவும், பல தொழில்நுட்பங்களை மக்களாகிய நாம் கற்று கொள்ளவும், நம் அனைவரின் தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த மென்பொருள் சுதந்திர தினத்தின் கொண்டப்படுகிறது.

நிகழ்விற்கு வரும்பொழுது பென்ட்ரைவ்(Pendrive) கொண்டு வந்து, உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை இலவசமாகப் பெற்று கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.

Best Mobiles in India

English summary
software freedom day : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X