முடிச்சு விட்டான் iQOO.. 9020mAh பேட்டரி, 16GB ரேம்.. தெறிக்க விடும் விலையில் புது 5G போன்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் அதன் இஸட் சீரிஸின் கீழ், ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வேகத்தில், சீனாவில் ஐக்யூ இஸட்11 5ஜி (iQOO Z11 5G) மாடலை அறிமுகம் செய்வுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் 2025 இல் ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமானதால், சீன அறிமுகத்திற்கு பின்னர் ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தைக்கு வருமா வராதா என்பதில் எந்த குழப்பமும் இல்லை - கண்டிப்பாக வரும்; என்ன? கொஞ்சம் தாமதமாக வரலாம்.

ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? பெரிதும் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக, ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெஞ்ச்மார்க்கிங் தளத்தில் (Benchmarking site) காணப்பட்டுள்ளது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வழியாக கிடைத்துள்ள பெஞ்ச்மார்க்கிங் தள விவரங்களின்படி, ஐக்யூ இசை 1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 8500 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இந்த சிப்செட், மாலி-G720 MC8 ஜிபியு மற்றும் 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம்.
ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? அறிமுகத்திற்கு முன்னதாகவே, இந்த ஸ்மார்ட்போனில் 165Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளே இருக்கும் என்பதை ஐக்யூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதில் 9,020mAh பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதுவே ஐக்யூ ஸ்மார்ட்போன்களிலேயே பேக் செய்யப்பட்ட மிகப்பெரிய பேட்டரி என்றும் கூறப்படுகிறது.
ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சீனாவில் ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.27,000 முதல் ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வண்ணம் தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது. ஆக இந்தியாவில் இது ரூ.30,000-ஐ ஒட்டிய ஆரம்ப விலையில் அறிமுகமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புதிதாக அறிமுகமாகி, விற்பனையை தொடங்கி உள்ள ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி விலை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும் வாங்க கிடைக்கிறது
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ. 2,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று ஐக்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக பிரிஸ்மாடிக் கிரீன் மற்றும் டைட்டன் பிளாக் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.76-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69+ ரேட்டிங்ஸ்
- 4 என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் பொக்கே கேமரா
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7200mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








