மார்ச் 19 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 7000mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புதிய Realme 5ஜி போன்..
கடந்த சில மாதங்களில் ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அதிக போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரெட்மி, விவோ, ஒன்பிளஸ், நத்திங் போன்ற நிறுவனங்களை விட ரியல்மி நிறுவனம் தான் இந்தியாவில் அதிகமான போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி.
வரும் மார்ச் 19-ம் தேதி இந்தியாவில் ரியல்மி பி4 லைட் 5ஜி (realme P4 Lite 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த புதிய ரியல்மி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (realme P4 Lite 5G Specifications): தரமான மீடியா டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6300 5G chipset) உடன் இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate)உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனுக்கு MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் இந்த புதிய ரியல்மி போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதுவும் மொசைக் கிரீன் மற்றும் மொசைக் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும்.
5300mm² ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டம் இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி பி4 லைட் 5ஜி போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








