POCO போட்ட போடு.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5520mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
போகோ நிறுவனத்தின் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலான போகோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு ஒரே நேரத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன. வெறும் 7.35 எம்எம் தடிமனில் 5520mAh பேட்டரியை கொடுக்கும் இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் விலைக்கு 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொடுக்கும் நிறுவனங்களில் போகோவும் ஒன்றாக இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளவுடன் போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கியது. 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மாடல் ரூ.18,999 விலைக்கு அறிமுகமானது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.17,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கார்பன் பிளாக் (Carbon Black) கலரில் கிடைக்கிறது.
மேலும், ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் கிளாசியல் ப்ளூ (Glacial Blue) ஆகிய கலர்களிலும் கிடைக்கிறது. இதில் பிளாக் மற்றும் சில்வர் கலர் வேரியண்ட்களில் டூயல் டோன் கிடைக்கிறது. 7.35 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. ஆனால், பெரிய பேட்டரிக்கு ஏற்ப 211 கிராம் எடை கொடுத்து உள்ளது. இப்போது, முழு பீச்சர்களை பார்க்கலாம்.
போகோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core 4nm Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்கிரேட்கள் வருகின்றன. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உள்ளது.
வெட் டச் டெக்னாலஜி 2.0 (Wet Touch Technology 2.0) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஐ கேர் டிஸ்பிளே மாடலாக இருப்பதால், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.
லைட் ப்யூஷன் 400 (Light Fusion 400) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளது. 5520mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








