Home
Mobile

Samsung-ன் அடுத்த சம்பவம்.. 52 மணிநேரம் பேட்டரி லைஃப்பை வழங்கும் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனமானது 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை, உலகளவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அவைகள் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (Samsung Galaxy A37 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) மாடல்கள் ஆகும்.

சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அன்பாக்ஸிங் மற்றும் ஹேண்ட்ஸ்-ஆன் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் உள்ள ஒரு கடையில் ரீடெயில் விற்பனைக்கான யூனிட்கள் கையாளப்படுவதை இந்த வீடியோக்கள் காட்டுகின்றன. அதை அப்படியே டிப்ஸ்டர் @VerdeSelvans என்பவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Samsung-ன் அடுத்த சம்பவம்.. 52 மணிநேரம் பேட்டரி லைஃப்!

அந்த வீடியோக்களின் வழியாக கேலக்ஸி ஏ57 5ஜி மாடலின் எம்ஆர்பி விலையும் லீக் ஆகியள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.51,182 என்றும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.59,685 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் பழைய மாடலை விட விலை அதிகமாகும்,

குறிப்பிடத்தக்க வண்ணம், சாம்சங் நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் இந்தியாவில் வாங்க கிடைக்கும் பல கேலக்ஸி ஏ, எம் மற்றும் எப் சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான விலைகளை அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால், வரப்போகும் கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 ஆகிய மாடல்களும், இந்திய சந்தையிலும் அவற்றின் முன்னோடிகளை விட சற்று அதிக விலையில் அறிமுகமாகும்.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ37 5ஜி மாடல் ஆனது கிரேக்ரீன், சார்கோல், லாவெண்டர் மற்றும் ஒயிட் ஆகிய ஆப்ஷன்களில் வரும் என்று வெளியான வீடியோ குறிப்பிடுகிறது. டிசைனை பொறுத்தவரை இந்த போன், க்ளீன் ஆன பேக் பேனல் மற்றும் செங்குத்தான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் சாம்சங்கிற்கே உரிய மிகவும் பரிச்சயமான தோற்றத்தை கொண்டுள்ளது.

மறுபுறம் உள்ள கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது லீக் ஆன வீடியோ கிளிப்பில் பர்பிள் நிறத்தில் தோன்றுகிறது. இது கிரே, ஐஸி ப்ளூ, லிலியாக் மற்றும் நேவி ஆகிய கலர் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக NieuweMobiel வழியாக கிடைத்த தரவுகளின்படி, கேலக்ஸி ஏ37-ஐ ஒரு முறை சார்ஜ் செய்தால் அது 53 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும். மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ57-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் அது 52 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.

இந்த தரவுகள் முன்னதாக வெளியான கேலக்ஸி ஏ36 மற்றும் கேலக்ஸி ஏ56 வழங்கிய (முறையே) 41 மணிநேரங்கள் மற்றும் 44 மணிநேரங்களை விட அதிகமாகும். பேட்டரி சகிப்புத்தன்மையின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. மேலும் பேட்டரியின் லாங்கிட்டிவிட்டி ஆனது 1200 சார்ஜ் சுழற்சிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் 2,000 சார்ஜிங் சுழற்சிகளை விட குறைவாக தெரிகிறது. இருப்பினும், சில நிபுணர்கள் இந்த மாற்றம் தற்போதைய பேட்டரி தரத்தில் சரிவை விட புதிய இயு சோதனை விதிமுறைகளால் ஏற்பட்டதாக நம்புகின்றனர். இதுவொரு பக்கம் இருக்க இந்த 2 புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுமே IP68 ரேட்டிங் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக கேலக்ஸி ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது IP67 ரேட்டிங்கையே பெறுகின்றன. இது நல்ல பாதுகாப்பை வழங்குகிறது தான், ஆனால் முதன்மை தரத்தை விட சற்று குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது. IP68 ரேட்டிங்கிற்கு மாறுவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் 1.5 மீட்டர் வரை தண்ணீரில் 30 நிமிடங்கள் மூழ்குவதை தாங்கும்.

உருவாக்க தரமும் இந்த இரண்டு கேலக்ஸி ஏ-சீரீஸ் மாடல்களுக்கும் இடையிலான சில சுவாரஸ்யமான வேறுபாடுகளை காட்டுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல் ஆனது வீழ்ச்சி எதிர்ப்பிற்கு அதிக "A" ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதே நேரத்தில் கேலக்ஸி ஏ37 மாடலானது "B" ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஆக கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது சற்று வலுவூட்டப்பட்ட பொருட்கள் அல்லது வேறு தர கிளாஸை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A37 and Galaxy A57 Leaked Unboxing Video Confirms Price Hike
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X