விடவே கூடாத விலை குறைப்பு.. 6000mAh பேட்டரி, 100W சார்ஜிங் கொண்ட இந்த OnePlus 5ஜி போன் மீது!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தை பார்த்து "தீயாக வேலை செய்யுதே" என்று கூறினால் அது ஓவர் பில்ட்அப் ஆக இருக்காது. ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸின் (OnePlus Nord 6 Series) இந்திய அறிமுகத்தை டீஸ் செய்ய தொடங்கி உள்ளது
இந்த சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி (OnePlus Nord CE 6 5G) என்கிற 2 மிட்-ரேன்ஜ் மாடல்கள் அறிமுகம் செய்யபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனம் சீனாவில் அதன் ஒன்பிளஸ் 15டி மாடலையும் கூடிய விரைவில் (இந்த மாதத்திற்குள்) அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் 15டி ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒரே நேரத்தில் பல வகையான ஸ்மார்ட்போன்களிலும், புதிய அறிமுகங்களிலும் பணியாற்றி வருகிறது.
இப்படி பல புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிற்கு படையெடுக்கும் மறுகையில் "சைலன்ட் ஆக" சில பழைய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்களின் விலைகள் கடுமையாக குறைந்துள்ளன. அதில் ஒன்பிளஸ் 13 5ஜி (OnePlus 13 5G) மாடலும் அடங்கும். இதன் விலை அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) ஆகிய 2 தளங்களிலும் குறைந்துள்ளது.
இருப்பினும் அமேசான் தான் அதிகப்படியான விலை குறைப்பை வழங்குகிறது. அமேசானில் தற்போது 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ள பேஸிக் ஒன்பிளஸ் 13 வேரியண்ட் ஆனது ரூ.60,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.69,999 க்கு அறிமுகமானது. ஆக ரூ.9000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை ஆனது ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளத்திலும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்குறிப்பிட்ட அதே பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.62,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரூ.72,999 க்கு விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் 15 5ஜி (OnePlus 15 5G) ஸ்மார்ட்போனை வாங்கும் அளவிற்கு பட்ஜெட் இல்லாதவர்கள் ஒன்பிளஸ் 13 மாடலை தாராளமாக கருத்தில் கொள்ளாலாம்.
ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சஙகள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 8 எலைட் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது
முன்பக்கத்தில் ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட்6 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் வரலாம்.
கேமராக்களை பொறுத்தவரை இது 50MP LYT-600 OIS ப்ரைமரி கேமரா + 8MP அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராக்களுடன் வரலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங் உடன் வரலாம். இது 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








