ராவண மவன்டா.. 7200mAh பேட்டரி, IP69 ரேட்டிங்.. ஆளுக்கு 1 ஆர்டர் போடும் விலையில் VIVO-வின் புது 5G போன்!
விவோ (VIVO) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகவும், இந்திய சந்தையில் அதன் முதல் டி5 சீரிஸ் ஸ்மார்ட்போனாகவும் - விவோ டி5எக்ஸ் 5ஜி (VIVO T5x 5G) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன விலை? என்ன ஆபர்? எப்போது முதல் விற்பனை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.76 இன்ச் (2408×1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட் (4nm Octa Core MediaTek Dimensity 7400 Turbo) சிப்செட் கொண்டுள்ளது. இது மாலி ஜி615 எம்சி2 ஜிபியு, 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம், 128ஜிபி / 256ஜிபி(UFS 3.1) இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது சோனி IMX852 சென்சார், எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் (எப்/2.4 அபெர்க்ஷர்) டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதன் கேமரா செட்டப்பில் எல்இடி பிளாஷ் மற்றும் 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி (எப்/2.45 அபெர்க்ஷர்; 4கே ரெக்கார்டிங்) செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை விவோ டி5எக்ஸ் 5ஜி ஆனது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 7200எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூவயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒர்ஜின்ஓஎஸ் 6, யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், MIL-STD-810H மிலிட்டரி கிரேட் டியூரபிலிட்டி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69+ ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேலும் இது 5ஜி SA and NSA, 4ஜி VoLTE, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பைடூ, யுஎஸ்பி டைப்-சி 2.0 ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் வழங்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த விவோ 5ஜி ஸ்மார்ட்போனானது இன்ப்ரா ரெட் சென்சாரையும் கொண்டுள்ளது.
விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 24, 2026 முதல் பிளிப்கார்ட் (Flipkart), விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அனைத்து பார்ட்னர் ரீடெயில் கடைகளின் வழியாகவும் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையின் போது இது சைபர் கிரீன் மற்றும் ஸ்டார் சில்வர் ஆகிய இரண்டு கலர்களில் வாங்க கிடைக்கும்.
விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மீதான விற்பனை சலுகைகள்: எச்டிஎப்சி (HDFC), ஆக்சிஸ் (Axis), எஸ்பிஐ (SBI) பேங்க் கார்டுகள் மற்றும் யுபிஐ மூலம் வாங்கும்போது ரூ.2000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனின் கீழும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








