மார்ச் 24-ல் சம்பவம் இருக்கு.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 24-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான சில நாட்களில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 15டி அம்சங்கள் ( OnePlus 15T Specifications): 6.32 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மாரட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும்.
IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது புதிய ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் மாடல். இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
கலர்ஓஎஸ் 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன். எனேவ இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
7500mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் ப்யூர் கோகோ (Pure Cocoa), ரிலாக்ஸிங் மேச்சா (Relaxing Matcha) மற்றும் ஹீலிங் ஒயிட் சாக்லேட் (Healing White Chocolate) நிறங்களில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் எடை 194 கிராம் ஆகும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என ஐந்து வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்


Click it and Unblock the Notifications








