Home
Mobile

விலை இவ்வளவு தானா? மார்ச் 17-ல் வரும் புது Samsung 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 17-ம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி (Samsung Galaxy M17e 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய சாம்சங் போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி (Samsung Galaxy M17e 5G Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விலை இவ்வளவு தானா? மார்ச் 17-ல் வரும் புது Samsung 5ஜி போன்..

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6300 5G chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும்.

One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஜெமினி AI அசிஸ்டண்ட் போன்ற பல ஏஐ அம்சங்கள் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி போன் வெளியாகும்.

விலை இவ்வளவு தானா? மார்ச் 17-ல் வரும் புது Samsung 5ஜி போன்..

IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் இந்த சாம்சங் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.13,999 விலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்17இ 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo credits: samsung

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M17e 5G price and specifications leaked ahead of launch: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X