நிழல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனம்! விஞ்ஞானிகள் சாதனை..!

|

தலைப்பை பார்த்ததும் ஏதோ அறிவியல் புனைகதை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவம் போல தெரிகிறதா? ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நிழல்-விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் (Shadow-Effect Energy Generator SEG) ஒரு உண்மையான முன்மாதிரி சாதனம் ஆகும். உட்புறங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கப்படும் வழிமுறைகளை மாற்றுவதற்கு இந்த கண்கவர் கருத்துரு நமக்கு உதவக்கூடும்.

இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும்

மின்சாரம் தயாரிக்க இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இந்த சாதனம் பயன்படுத்துகிறது. ஒரு சிலிக்கான் செதில் மீது தங்க பிலீம் பட்டைகளின் மெல்லிய கீற்று‌ வரிசையால் ஆன இது, ஒரு நெகிழ்வான பிளாஸ்டிக் தளத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.

 புதுப்பிக்கத்தக்க சூரிய

பொதுவாக நிழல்கள் புதுப்பிக்கத்தக்க சூரிய ஆற்றல் உற்பத்திக்கு ஒரு பிரச்சினையாக இருந்தாலும், இங்கே அவை உண்மையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. பொதுவான சூரிய மின்கலத்தை உருவாக்குவதை விட மலிவான இந்த தொழில்நுட்பம், சிறிய அளவிலான சக்தியை உற்பத்தி செய்கிறது என்கின்றனர் இதனை கண்டுபிடித்தவர்கள். எடுத்துக்காட்டாக இதை குறைந்த அளவு மின்சக்தி தேவைபடும் மொபைல் கேஜெட்களில் பயன்படுத்தலாம்.

BSNL அதிரடி அறிவிப்பு: ரூ.99 திட்டத்தில் திருத்தம்., அன்லிமிட்டெட் கால்!BSNL அதிரடி அறிவிப்பு: ரூ.99 திட்டத்தில் திருத்தம்., அன்லிமிட்டெட் கால்!

எங்கும் நிறைந்தவை, அவற்றை நாம்

"நிழல்கள் எங்கும் நிறைந்தவை, அவற்றை நாம் பெரும்பாலும் சுலபமாக எடுத்துக்கொள்கிறோம். வழக்கமான ஒளிமின்னழுத்த அல்லது ஒளியியல் மின்சார சாதனங்களில், நிலையான ஒளியை சாதனங்களுக்கு சக்தி அளிக்க பயன்படுத்தும்போது, ​​நிழல்கள் இருப்பது விரும்பத்தகாத ஒன்று. ஏனெனில் இது சாதனங்களின் செயல்திறனைக் குறைக்கிறது.

" என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) விஞ்ஞானி டான் ஸ்வீ சிங் கூறுகிறார்.

வெளிச்சத்தில் உள்ள

"இந்த ஆராய்ச்சியில், நிழல்களால் ஏற்படும் வெளிச்ச வேறுபாட்டை ஒரு மறைமுக சக்தியாக நாங்கள் பயன்படுத்தினோம். வெளிச்சத்தில் உள்ள வேறுபாடு நிழல் மற்றும் ஒளிரும் பிரிவுகளுக்கு இடையே ஒரு மின்னழுத்த வேறுபாட்டைத் தூண்டுகிறது. இதன் விளைவாக மின்சாரம் கிடைக்கிறது. நிழல்களை முதன்மையாக கொண்டு ஆற்றலை அறுவடை செய்வதற்கான இந்த புதிய கருத்துரு முன்னோடியில்லாதது" என்கிறார் விஞ்ஞானி டான்.

மையில் SEG சாதன

நிழல் மற்றும் வெளிச்சத்திற்கு இடையிலான இந்த வேறுபாடு தான் உண்மையில் SEG சாதனத்தை திறம்பட பணியாற்றச் செய்கிறது. நிழல்கள் அடிக்கடி மாறுவதன், நிழல்-விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் அதே நிலைமைகளின் கீழ் வழக்கமான சூரிய மின்கலங்களை விட இரு மடங்கு பயனுள்ளதாக இருக்கும் என்று குழு கண்டுபிடித்தது.


SEG சாதனம் முற்றிலும் நிழலில் இருக்கும்போது ​​அல்லது முழுமையாக வெளிச்சத்தில் இருக்கும்போது (கீற்றுகள் முழுமைக்குமான மின்னழுத்தங்கள் அனைத்தும் ஒத்ததாக இருக்கும்போது), இது மிகக் குறைந்த அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது அல்லது உற்பத்தியே செய்வது இல்லை.

சென்சாராகவும்

மேகங்களால் அல்லது மரக் கிளைகளை அசைப்பதால் அல்லது சூரியனின் இயக்கம் காரணமாக ஏற்படும் நிலையில்லா நிழல்களுடன், இச்சாதனம் ஒரு டிஜிட்டல் கடிகாரத்தை இயக்க போதுமான சக்தியை (1.2 வி) உருவாக்க முடியும் என இக்குழு நிரூபித்ததுள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம்.

"மின்சார உற்பத்திக்கான உகந்த பரப்பு என்பது SEG கலன்கள் பாதி வெளிச்சத்திலும் மற்ற பாதி நிழலில் இருப்பது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். ஏனெனில் இம் முறையே ஆற்றல் உற்பத்தி மற்றும் சேகரிப்புக்கு போதுமான பரப்பை கொடுக்கும்" என்கிறார் NUS இன் இயற்பியலாளர் ஆண்ட்ரூ வீ.

இந்த SEG சாதனம் ஒரு சென்சாராகவும் செயல்படுகிறது. இதன்மூலம் கடந்து செல்லும் பொருட்களின் இயக்கத்தை பதிவு செய்ய அதன் மீது செல்லும் நிழல்களை பதிவு செய்யலாம். இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் பல்வேறு பயன்பாடுகளை இது கொண்டிருக்கலாம். மேலும் சுயமாக இயங்கும் சென்சார்களை உருவாக்க கூட பயன்படுத்தப்படலாம்.

ப்போது தங்களது SEG சாதனத்தின் விலையை குறைக்க முயற்சிக்க

இந்த புதுமையான சாதனம் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படும் நிலையில், ஆராய்ச்சியாளர்கள் இப்போது தங்களது SEG சாதனத்தின் விலையை குறைக்க முயற்சிக்க விரும்புகிறார்கள். ஒருவேளை தங்க பட்டைகளுக்கு மாற்றாக வேறு உலோகத்தை பயன்படுத்துவதன் மூலம் இதை செய்யலாம். அணியக்கூடிய சாதனங்களின் பயன்பாட்டிற்காக இது மேலும் மாற்றியமைக்கப்படலாம்.

ம் கற்பனை

எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான பல வழிகள் நமக்கு கிடைக்கும் நிலையில், நமது கேஜெட்களுடன் நாம் கற்பனைக்கு எட்டாத பயன்பாடுகளுடன், ஆற்றல் உற்பத்திக்கு புதைபடிவ எரிபொருளை நம்பியிருக்க வேண்டியதும் குறையும். பனிப்பொழிவு மற்றும் விண்வெளியின் குளிருடன் சேர்ந்து மாற்று ஆற்றல் மூலங்களின் பட்டியலில் நிழல்களையும் இப்போது சேர்க்கலாம்.

" செலவுகளை குறைத்தல், எளிமை மற்றும் ஸ்திரத்தன்மையுடன், எங்களது SEG சாதனம் சுற்றுப்புற நிலைமைகளிலிருந்து மின்னணுவியல் சாதனங்கள் முதல் ஸ்மார்ட் சென்சார் அமைப்புகள் வரை பசுமை ஆற்றலை உருவாக்குவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய கட்டமைப்பை வழங்குகிறது." என ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Scientists Invented New Method Of Generating Electricity From Shadow: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X