FASTag விலை உயர்வில் இருந்து தப்பிக்க வேண்டுமா.. அப்போ ஏப்ரல் 1-க்கு முன் இதை செஞ்சிடுங்க.. என்னது?
என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது வருகிற 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வருடாந்திர பாஸ்டாக் பாஸ் (FASTag Annual Pass) கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
என்எச்ஏஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வருடாந்திர பாஸ்டாக் பாஸ் விலை ஆனது ரூ.3,000 இல் இருந்து ரூ.3,075 ஆக விலை உயர்த்தப்படும். இந்த விலை மாற்றம் ஏப்ரல் 1, 2026 முதல் அல்லது 2026-27 புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை மிச்சப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்? என்எச்ஏஐ அறிவித்துள்ள விலை உயர்வு ஏப்ரல் 1, 2026 முதல் தான் அமலுக்கு வரும். எனவே தற்போது வருடாந்திர பாஸை பயன்படுத்தி வருபவர்கள் மற்றும் சிறிது பணத்தை சேமிக்க விரும்புபவர்கள், விலை அதிகமாக மாறுவதற்கு முன்பு இந்த பாஸ்டாக்-ஐ வாங்கலாம்.
ஆன்லைன் வழியாக பாஸ்டாக் வருடாந்திர பாஸை எப்படி வாங்குவது எப்படி? கார், ஜீப், வேன் ஓனர்கள் அல்லது வாகன ஓட்டிகள் உட்பட பாஸ்டாக் பாஸ் தேவைப்படும் எந்தவொரு தனிநபரும் ராஜ்மார்க் யாத்ரா மொபைல் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ என்எச்ஏஐ வலைத்தளம் மூலம் பாஸ்டாக் வருடாந்திர பாஸை வாங்கலாம்.
என்எச்ஏஐ வலைத்தளத்தைப் பயன்படுத்தி பாஸ்டாக் வருடாந்திர பாஸை வாங்குவது எப்படி?
- அதிகாரப்பூர்வ என்எச்ஏஐ வலைத்தளத்திற்கு செல்லவும்
- உங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களுடன் லாக்இன் செய்யவும்
- பாஸ்டாக் வருடாந்திர பாஸ் செக்ஷனை கண்டறியவும்.
- வாகனம் அல்லது பாஸ்டாக் விவரங்களை உள்ளிடவும்.
- தகுதியை உறுதிசெய்து பணம் செலுத்தவும்
- பணம் செலுத்திய பிறகு, வாகனத்துடன் தொடர்புடைய பாஸ்டாக்கில் வருடாந்திர பாஸ் ஆக்டிவ் ஆகி இருக்கும்.
ராஜ்மார்க் யாத்ரா ஆப்பை பயன்படுத்தி பாஸ்டாக் வருடாந்திர பாஸை வாங்குவது எப்படி?
- கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ராஜ்மார்க் யாத்ரா ஆப்பை பதிவிறக்கவும்.
- உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி லாக்இன் செய்யவும்
- வாகனத்தின் பாஸ்டாக் அக்கவுண்ட்டை லிங்க் செய்யவும்
- பாஸ்டாக் வருடாந்திர பாஸ் செக்ஷனுக்கு செல்லவும்.
- வாகனத்தை தேர்ந்தெடுத்து வாங்குதலை உறுதிப்படுத்தவும்.
- பொருந்தக்கூடிய கட்டணத்தை செலுத்தவும்.
பாஸ்டாக் வருடாந்திர பாஸ்-ன் கீழ் என்னென்ன கிடைக்கும்? பாஸ்டாக் வருடாந்திர பாஸ் ஆனது தனியார் வாகன உரிமையாளர்கள் தங்கள் பாஸ்டாக்-ஐ சுங்கச்சாவடிகளில் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே கட்டணம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த பாஸ் ஒரு வருடம் அல்லது 200 டோல் கிராஸிங்குகளுக்கு செல்லுபடியாகும் (எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை). தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் உள்ள தோராயமாக 1,150 டோல் பிளாசாக்களில் இதை பயன்படுத்தலாம்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் (MoRTH) உள்ள தரவுகளின்படி, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை பயனர்கள் தற்போது வருடாந்திர பாஸ் மூலம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் - தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கில் பதிவுசெய்யப்பட்ட மொத்த கார் பரிவர்த்தனைகளில் (வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு) நான்கில் ஒரு பங்கு அல்லது சுமார் 28% இப்போது ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 2016 இல் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 11.86 கோடி ஃபாஸ்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை இந்த தரவு காட்டுகிறது.


Click it and Unblock the Notifications