மினி போன் கிடக்குது.. OPPO-வின் இந்த மினி Tablet-ஐ பாருங்க.. 16GB ரேம், 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனம் ஆனது டேப்லெட் மார்க்கெட்டில் உள்ள மற்ற மினி டேப்லெட் மாடல்களுடன் போட்டியிடும் நோக்கத்தின் கீழ் ஒரு புதிய மினி டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக இம்மாத தெடக்கத்தில் தகவல் (டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக) வெளியாகி இருந்தது
அது ஒப்போ பேட் மினி (Oppo Pad Mini) என்கிற மாடல் பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதே டிப்ஸ்டர், இதே மினி டேப்லெட் குறித்த இன்னொரு புதிய லீக் உடன் திரும்பி வந்துள்ளார். இம்முறை அவர் குறிப்பிட்ட ஒப்போ டேப்லெட்டின் சாத்தியமான உஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒப்போ பேட் மினி டேப்லெட்டின் ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒப்போ பேட் மினி ஆனது நான்கு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 8ஜிபி ரேம் +256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்.
மேலும் இந்த ஒப்போ மினி டேப்லெட் ஆனது மூன்று கலர் ஆப்ஷன்களில் வரும் என்று கூறப்படுகிறது: மோனெட் பர்பிள், டான் கோல்ட் மற்றும் மோச்சா பிரவுன். அதே லீக் ஆனது ஒப்போ பேட் மினி மாடலானது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதையும் குறிக்கிறது. இருப்பினும், டேப்லெட்டின் பிற அம்சங்கள் இன்னும் வெளிவரவில்லை.
ஒப்போ பேட் மினி என்கிற மாடல் பெயர் ஆண்டு தற்போது வரை தற்காலிகமானது தான் என்பதையும், இந்த மாடல் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையும் இங்கே மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம். சீனாவில் இது ரெட்மி கே பேட் 2, ரெட் மேஜிக் கேமிங் டேப்லெட் 5 ப்ரோ மற்றும் லெனோவா லெஜியன் ஒய்700 2026 போன்ற காம்பாட் கேமிங் டேப்லெட்டுகளுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அறிமுகம்? ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் டேப்லெட் மாடல்கள் ஆன ஒப்போ பேட் ஏர், ஒப்போ பேட் எஸ்இ, ஒப்போ பேட் 5 ஆகிய மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருப்பதால்.. ஒப்போ பேட் மினி மாடலின் அறிமுகத்தையும் நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.
ஒப்போ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளில் - மூன்று 200எம்பி கேமராக்களுடன் வரும் ஸ்மார்ட்போன் கவனிக்கத்தக்கதாக உள்ளது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலாக இருக்கலாம். முன்னதாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் லீக் ஆனது, இது அசாதாரணமான ட்ரிபிள் 200எம்பி கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்.
மேலும் இந்த லீக் ஆனது அந்த 3 கேமராக்களில் ஒன்று 1/1.56 இன்ச் அளவுள்ள 200 மெகாபிக்சல் சென்சாரை பயன்படுத்தும் அல்ட்ரா-வைட் லென்ஸாக இருக்கும் என்றும் கூறுகிறது. இந்த சென்சார் - தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அல்ட்ரா-வைட் கேமராக்களுக்கு பயன்படுத்தும் சென்சார்களை விட கணிசமாக பெரியதாகும்.
ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலில் எதிர்பார்க்கப்படும் மூன்று 200எம்பி ரியர் கேமராக்களை தவிர்த்து, ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே வரவிருக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 9600 (MediaTek Dimensity 9600) சிப்பால் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மேலே உள்ள எந்த விவரங்களுமே ஓப்போவால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒப்போ அதன் அடுத்த பிளாக்ஷிப் சீரீஸிற்கு வழக்கத்திற்கு மாறாக அடுக்கப்பட்ட கேமரா அமைப்பை பரிசோதித்து வருவதாக லீக்ஸ் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








