Home
Gadgets

OPPO ஒரே போடு.. 13000mAh பேட்டரி, 16GB ரேம், 13.2-இன்ச் டிஸ்பிளே.. முரட்டு காம்பினேஷனில் புது டேப்லெட்!

ஒப்போ (OPPO) நிறுவனத்தின் அடுத்த மினி டேப்லெட் ஆன ஒப்போ பேட் மினி (Oppo Pad Mini) குறித்த விவரங்கள் லீக் ஆன மறுநாளே, அதே சீரிஸின் கீழ் வரவுள்ள ஒப்போவின் அடுத்த ஹை-எண்ட் டேப்லெட் குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன. அது ஒப்போ பேட் 5 ப்ரோ (Oppo Pad 5 Pro) மாடலாகும்.

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ பேட் 5 மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகமாகி ரூ.30,999 க்கு (பிளிப்கார்ட் வழியாக) வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ப்ரோ மாடல் - இந்திய சந்தைக்கு வருமா வராதா என்கிற சந்தேகம் வேண்டாம். வரும்; ஆனால் நிச்சயம் அதிக விலைக்கு வரும்.

 OPPO ஒரே போடு.. 13000mAh பேட்டரி உடன் புது டேப்லெட்!

ஒப்போ பேட் 5 ப்ரோவின் லீக் ஆன அம்சங்கள் - இது ஓப்போ நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த டேப்லெட் மாடல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனிடமிருந்து கிடைத்த விவரங்களின்படி, ஒப்போ பேட் 5 ப்ரோ மாடலானது 13.2-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

இந்த "சைஸ்" உண்மையாகும் பட்சத்தில், தற்போது உருவாக்கத்தில் உள்ள பெரிய ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில் இதுவும் ஒன்றாக மாறும். பெரிய டிஸ்பிளே என்பதால் நிச்சயம் ஹை-ரெசல்யூஷன் மற்றும் அதிக ரெஃப்ரெஷ் ரேட்-ஐ கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒப்போ பேட் 4 ப்ரோவானது 2400 x 3392 ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை பேக் செய்கிறது, இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை வரவிருக்கும் ஒப்போ பேட் 5 ப்ரோ டேப்லெட் ஆனது குவால்காமின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படலம். இதுவும் உண்மையாகும் பட்சத்தில் ஒப்போ பேட் 5 ப்ரோ ஆனது பிளாக்ஷிப் டேப்லெட் பிரிவில் ஒரு உறுதியான இடத்தில் அமரும். இது கேமிங், வீடியோ எடிட்டிங் மற்றும் மல்டி-டாஸ்கிங்கை சிறப்பாக கையாளும்.

பேட்டரியை பொறுத்தவரை, லீக் ஆன விவரங்கள் ஒப்போ பேட் 5 ப்ரோ மாடலில் 11905mAh மதிப்பிடப்பட்ட திறனை (Rated capacity) குறிப்பிடுகிறது. வழக்கமான திறன் (Typical capacity) சுமார் 13,000mAh-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் முன்னதாக வெளியான மாடலை போலவே 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ பேட் 5 ப்ரோவில் வீடியோ கால்களுக்கான 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 13எம்பி ரியர் கேமரா இடம்பெறலாம். இது டாக்குமெண்ட் ஸ்கேனிங் மற்றும் "அவ்வப்போது" போட்டோ எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது போல் தெரிகிறது. ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஒப்போ பேட் 5 ப்ரோவானது 8ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோஎஜ் ஆப்ஷன்களில் வெளியாகலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஒப்போ பேட் மினி டேப்லெட் குறித்த விவரங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒப்போ பேட் மினி ஆனது நான்கு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: 8ஜிபி ரேம் +256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்.

மேலும் இந்த ஒப்போ மினி டேப்லெட் ஆனது மூன்று கலர் ஆப்ஷன்களில் வரும் என்று கூறப்படுகிறது: மோனெட் பர்பிள், டான் கோல்ட் மற்றும் மோச்சா பிரவுன். ஒப்போ பேட் மினி மாடலானது 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதையும் குறிக்கிறது. இருப்பினும் பிற அம்சங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஒப்போ பேட் மினி என்கிற மாடல் பெயர் தற்காலிகமானது தான் என்பதையும், இந்த மாடல் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Pad 5 Pro Tipped to Pack 13000mAh Battery Snapdragon 8 Elite Gen 5 13 2 inch Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X