Home
How to

1 மிஸ் ஆச்சுனாலும் பேங்க் அக்கவுண்ட்டுக்கு சிக்கல்.. உடனே ஆதாரில் இந்த 3 விஷயத்தையும் செக் பண்ணுங்க!

ஆதார் கார்டு (Aadhaar Card) பற்றி எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம் என்னவென்றால் - ஆதார் அட்டையானது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. புதிய பேங்க் அக்கவுண்ட்களை திறப்பது, கேஒய்சி (KYC) சரிபார்ப்பை நிறைவு செய்வது மற்றும் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை பெறு உதவுவது என பல அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் தேவைப்படுகிறது.

இருப்பினும் ஆதார் பற்றி இன்னமும் கூட சிலருக்கு தெரியாத விஷயங்களில் உள்ளன. அது என்னவென்றால் - ஆதார் அட்டையில் உள்ள விவரங்களில் நாம் செய்யும் 3 தவறுகள் - வங்கி தொடர்பான சேவைகளில் சில கடுமையான சிக்கல்களை உருவாக்கக்கூடும், சில சந்தர்ப்பங்களில் வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படுவதற்குமான (கட்டுப்பாடுகள்) வாய்ப்புகளை கூட உருவாக்கும்.

உடனே ஆதாரில் இந்த 3 விஷயங்களையும் செக் பண்ணுங்க!

முதல் தவறு: மிகவும் பொதுவான பிழைகளில் ஒன்றாகும் - பெயர் பொருத்தமின்மை. அதாவது அது ஆதார் அட்டையில் உள்ள உங்களுடைய பெயரில் இருக்கும் பிழை ஆகும். சில நேரங்களில் ஆதார் அட்டையில் ஒரு நபரின் பெயரின் எழுத்துப்பிழை ஆனது பேங்க் அக்கவுண்ட்டில் பதிவு செய்யப்பட்ட பெயரிலிருந்து வேறுபடுகிறது.

அடையாள சரிபார்ப்பின் போது ஆதார் அட்டையில் உள்ள உங்களுடைய பெயரில் ஒரு சிறிய எழுத்துப்பிழை இருந்தாலும் கூட அல்லது சிறிய மாறுபாடு இருந்தாலும் கூட அது கூட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். வங்கிகள் அத்தகைய முரண்பாடுகளை கண்டறிந்தால், விவரங்கள் சரிசெய்யப்படும் வரை அக்கவுண்டகளில் தற்காலிகமாக சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

இரண்டாவது தவறு: மற்றொரு முக்கிய பிரச்சினை ஆதாருடன் இணைக்கப்பட்ட தவறான அல்லது காலாவதியான மொபைல் நம்பர் (Incorrect or outdated mobile number) ஆகும். பல ஆதார் தொடர்பான சேவைகள் மற்றும் வங்கி செயல்முறைகளுக்கு ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு (OTP-based verification) தேவைப்படுகிறது.

ஆக பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பர் பழையதாகவோ அல்லது செயலற்றதாகவோ இருந்தால், ஆன்லைன் வங்கி அல்லது ஆதார்-இணைக்கப்பட்ட சேவைகளுக்கு தேவையான அங்கீகார படிகளை முடிப்பதில் பயனர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆகையால் ஆக்டிவ் ஆக உள்ள மொபைல் நம்பரை ஆதார் உடன் இணைக்கவும் அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ளவும்.

மூன்றாவது தவறு: இது முக்கியமான பிரச்சனை ஆகும் - அது பிறந்த தேதியில் உள்ள முரண்பாடு. கேஒய்சி சரிபார்ப்பு செயல்பாட்டின் போது, ​​வங்கிகள் ஆதார் தகவல்களை தங்கள் சொந்த பதிவுகளுடன் ஒப்பிடுகின்றன. அதில் உங்களுடைய பிறந்த தேதி பொருந்தவில்லை என்றால், வங்கியின் சரிபார்ப்பு தோல்வியில் முடியும். மேலும் அந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை பேங்க் அக்கவுண்ட் தற்காலிக கட்டுப்பாடுகளை சந்திக்கலாம்.

நிபுணர்கள் கருத்து: இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி, ஆதார் விவரங்களை தொடர்ந்து சரிபார்த்து, அவை வங்கி பதிவுகளுடன் சரியாக பொருந்துவதை உறுதி செய்வது தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணம் தொடர்பான சேவைகளில் ஏற்படும் இடையூறுகளை தடுக்க, ஆதார் அட்டையில் உள்ள சிறிய வேறுபாடுகள் கூட உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

மேலும் ஆதார் அட்டையில் உள்ள தவறான விவரங்களை, சரி செய்வது அல்லது புதுப்பிப்பது ஒப்பீட்டளவில் எளிமையானதும் கூட. சிறிய மாற்றங்களை அதிகாரப்பூர்வ ஆதார் ஆப் அல்லது வலைத்தளம் மூலம் செய்ய முடியும்/ அதே நேரத்தில் பெயர் அல்லது பிறந்த தேதிகளில் செய்யப்படும் திருத்தங்களுக்கு, செல்லுபடியாகும் துணை ஆவணங்களுடன் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டியிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Check these 3 things in Aadhaar immediately Even if you miss 1 it will cause problems for your bank account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X