Home
Mobile

Apple-ஐ பார்த்து மற்ற கம்பெனி கத்துக்கணும்.. iPhone 18 Pro, Pro Max விலை.. குட் நியூஸ் சொன்ன மிங்-சி குவோ!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 17இ (iPhone 17e) விற்பனைக்கு வந்ததும் ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடல்களான ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் (iPhone 18 Pro Max) விலை நிர்ணயம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது

இந்த தகவல் மிகவும் நம்பகமான ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோவிடம் இருந்து வந்துள்ளதால், பெரும்பாலும் இது உண்மையாக மாற அதிக வாய்ப்புள்ளது. டிஎஃப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸின் மிகவும் மதிக்கப்படும் ஆய்வாளரான மிங்-சி குவோவின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஹை-எண்ட் மாடல்களுக்கான விலைகளை நிலையானதாக வைக்கலாம்.

iPhone 18 Pro, Pro Max விலை.. குட் நியூஸ் சொன்ன மிங்-சி குவோ!

அதாவது சந்தையில் நிலவும் தற்போதைய நிலைமைகளை (நினைவகம் மற்றும் சிப்கள் போன்ற கூறுகளின் விலை உயர்வுகளை, அதற்கான செலவுகளை) ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் தலையில் ஏற்றாது என்பது போல் தெரிகிறது. மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் செலவீனங்களை விலை உயர்வு மூலம் வாடிக்கையாளர்களின் தலையில் ஏற்றி வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆப்பிள் அதை செய்யப்போவதில்லை என்பது போல் தெரிகிறது. அதற்கான ஆப்பிளின் செலவுகள் அப்படியே இருக்கும் என்று அர்த்தமல்ல; ஆப்பிளுக்கு அதிக செலவு இருக்காது ஏன்னு அர்த்தமல்ல. கண்டிப்பாக இருக்கும். ஆனால் ஆப்பிள் இந்த அதிகரிப்பை நுகர்வோருக்கு வழங்காது என்பதே இதன் பொருள் ஆகும்.

தற்போது, ​​ஐபோன் 17 ப்ரோவின் விலை ரூ,1,34,900 இல் இருந்தும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் விலை ரூ.1,49,900 இல் இருந்தும் தொடங்குகிர்து. இந்த விலைகளை அப்படியே ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கும் வைத்திருப்பது வாங்குபவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.

முதலில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்படுமா? கடந்த பல மாதங்களாவே ஐபோன் 18 சீரீஸ் மாடல்கள் ஆனது மொத்தமாக அறிமுகம் செய்யப்படாமல், பிரித்து பிரித்து அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் சுற்றி வருகிறது.

அதாவது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் (செப்டம்பர் 2026 இல்) ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மட்டும் வெளியாகும் என்றும், பின்னர் ஐபோன் 18 மாடல் ஆனது அடுத்த ஆண்டு "சரியாக இதே நேரத்தில்" ஐபோன் 18இ மாடலுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

சமீபத்தில் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 17இ மாடலின் விலை: இந்தியாவில் ஐபோன் 17இ மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.64,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது பிளாக், சாஃப்ட் பிங்க் மற்றும் ஒயிட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 17இ முக்கிய அம்சங்கள்: 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ19 சிப் மூலம் இயங்குகிறது

8ஜிபி ரேம் உடனான 256ஜிபி மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும் இந்த மாடல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இது ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் ஆதரிக்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடலானது எப்/1.6 அபெர்க்ஷர் உடனான 48 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது எப்/1.9 அபெர்க்ஷர் உடனான 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இதை இணக்கமான 20W சார்ஜர் (வயர்டு) மற்றும் 7.5W மேக்சேப் (வயர்லெஸ்) சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 18 Pro iPhone 18 Pro Max Prices Likely To Hold Steady Ming Chi Kuo Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X