சித்தப்பு நீங்களா.. Apple-ன் புது iPhone Ultra மாடல்? சிதறவிடும் விலையில் 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன்!
இதுவரை வெளியான எந்த தகவல்களிலும் கிடைக்காத ஒரு "மேட்டர்" இப்போது கிடைத்துள்ளது. இதுவரை வெளியான பெரும்பாலான லீக்ஸ் ஆனது ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஐபோன் (Foldable iPhone) ஆனது ஐபோன் போல்ட் (iPhone Fold) என்கிற மாடல் பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று பரிந்துரைத்தன.
ஆனால் ஒரு புதிய லீக் ஆனது ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோனிற்கு முற்றிலும் புதிய மாடல் பெயரை பரிந்துரைக்கிறது. கூடவே அதன் சாத்தியமான ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை நிர்ணய விவரங்களையும் வெளிப்படுத்தி உள்ளது. என்ன மாடல் பெயர்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

சைனீஸ் டிப்ஸ்டர் ஆன இன்ஸ்டன்ட் டிஜிட்டல் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி - ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் ஆனது ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) என்கிற மாடல் பெயரை பெறக்கூடும். மேலும் இது சீனாவில் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படலாம்
ஐபோன் அல்ட்ரா மாடலின் 256 ஜிபி ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.2,14,400 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அவர் கூறுகிறார். அடுத்ததாக உள்ள 512 ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.2,41,100 க்கும் மற்றும் 1டிபி வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.2,67,900 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்
இருப்பினும் மேக்வேர்ல்ட்-ன் ஒரு அறிக்கை, ஆப்பிள் நிறுவனமானது பொதுவாகவே மற்ற சந்தைகளில் விலை நிர்ணயத்தில் சில மாற்றங்களை செய்வது வழக்கம் என்று குறிப்பிடுகிறது. உதாரணமாக, 256ஜிபி ஐபோன் 17 ப்ரோ வேரியண்ட் ஆனது அமெரிக்காவில் $1,099 க்கு (தோராயமாக ரூ.1,01,500) க்கு விற்கப்படுகிறது, ஆனால் சீனாவில் CNY 8,999 க்கு (தோராயமாக ரூ.1,20,600) க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோன்ற விலை சரிசெய்தல்களின் அடிப்படையில், ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோனின் 256 ஜிபி மாடலுல் சுமார் $1,999 க்கு (தோராயமாக ரூ.1,84,700) க்கு தொடங்கலாம் என்று மேக்வேர்ல்ட்-ன் அறிக்கை மதிப்பிடுகிறது. ஆக 512 ஜிபி மற்றும் 1டிபி ஆப்ஷன்களின் விலை முறையே $2,199 (தோராயமாக ரூ.2,03,100) மற்றும் $2,399 (தோராயமாக ரூ.2,21,600) ஆக இருக்கலாம்.
முன்னதாக ஃப்ரண்ட் பேஜ் டெக் (FrontPageTech) என்கிற யூட்யூப் சேனலில் ஐபோன் போல்ட் என்று கூறப்படும் ஒரு போல்டபிள் ஸ்மார்ட்போனின் சிஏடி ரெண்டர்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவின்படி, ஐபோன் ஃபோல்ட் ஆனது ஒரு பெரிய இன்னர் டிஸ்பிளே மற்றும் ஒரு சிறிய எக்ஸ்டர்னல் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
ஃப்ரண்ட் பேஜ் டெக் வீடியோவில் காட்சிப்படுத்தப்படும் ஐபோன் ஃபோல்ட் ஆனது 5.5 இன்ச் அளவிலான வெளிப்புற டிஸ்பிளே மற்றும் 7.8 இன்ச் உள்பக்க டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஆப்பிளின் இந்த முதல் போல்டபிள் ஐபோன் ஆனது மடிக்கும்போது 9 மிமீ தடிமனையும் விரிக்கும்போது 4.5 மிமீ தடிமனையும் அளவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் ஃபோல்டில் டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் டூயல் செல்பீ ஷூட்டர்கள் இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளது. இந்த மாடல் ஆப்பிளின் தனியுரிம சி2 மோடத்துடன் இணைக்கப்பட்ட 2என்எம் ஏ20 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக இது டச் ஐடியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது பவர் பட்டனில் ஒருங்கிணைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








