Home
Mobile

அம்புட்டு இந்தியாவும் ஆர்டர் போடுமே.. சிம்பிள் டிசைனில் 9020mAh பேட்டரி.. புது iQOO 5ஜி போன்.. எந்த மாடல்?

7200mAh பேட்டரி உடன் ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) மாடல் இந்திய சந்தையில் அறிமுகமான வேகத்தில்.. 9,020mAh பேட்டரி உடன், கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐக்யூ 11 5ஜி (iQOO Z11 5G) ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் (First Look) வெளியாகி உள்ளது.

வெளியான புகைப்படத்தின் வழியாக ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளாஸ்டிக் ஃபிரேம் (Plastic frame) மற்றும் பேக் பேனலில் செங்குத்தாக அமைக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual vertical cameras) ஆகியவற்றை கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் ஆண்டெனா லைன்ஸ் (Antenna lines) எதுவும் தெரியவில்லை.

சிம்பிள் டிசைனில் 9020mAh பேட்டரி.. புது iQOO 5ஜி போன்!

ஆனால் ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும், அதன் பின்னரே இந்திய சந்தைக்கு வரும். முன்னதாக ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெளியாகியுள்ளதால் - ஐக்யூ இஸட்11 5ஜி மாடல் இங்கே வருமா வராதா என்கிற கேள்விக்கே இடமில்லை - கண்டிப்பாக அறிமுகமாகும்.

ஐக்யூ 11 பர்ஸ்ட் லுக்: சில தினங்களுக்கு முன்னதாக நடந்த ஐக்யூ நிறுவனத்தின் ஏழாவது ஆண்டு விழாவின் போது, ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவ்விழாவில் இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான கேமிங் டிஸ்பிளே மற்றும் ஒரு பெரிய 9,020mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

9020mAh பேட்டரி என்பது இதுவரை எந்த ஐக்யூ ஸ்மார்ட்போனிலும் நாம் காணாத மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி ஆக இருக்கும். இந்த பேட்டரி 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்தை பொறுத்தவரை எப்படி பார்த்தாழும் ஐக்யூ இஸட்11 5ஜி மார்ச் மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகி விடும் என்றே கூறலாம்

எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்11 5ஜி ஸ்மார்ட்போனின் சீன விலை நிர்ணயம் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.26,700 முதல் ரூ.40,100 க்குள் என்கிறவரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை மற்றும் வெளியீட்டு நாள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்; அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

முன்னதாக அறிமுகமான ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ஐக்யூ இந்தியா அதிகாரபூர்வ வலைத்தளத்தில் ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 8GB+128GB ஆப்ஷனின் விலை ஆகும். இதே ஸ்மார்ட்போன் 8GB+256GB ஆப்ஷனிலும் வாங்க கிடைகிர்து, விலை ரூ.26,999 ஆகும். கடைசியாக உள்ள ஹை எண்ட் 12GB+256GB ஆப்ஷனின் தற்போதைய விலை ரூ.28,999 ஆக உள்ளது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே
- 2392 x 1080 பிக்சல்ஸ்
- எச்டிஆர் 10 பிளஸ்
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம்
- 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்

- அட்ரெனோ 720 ஜிபியு உடனான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்

- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்

இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: பேஸிக் 6GB + 128GB ஆப்ஷன் ரூ.18,999 க்கும், 8GB + 128GB ஆப்ஷன் ரூ.20,999 க்கும், ஹை எண்ட் 8GB + 256GB ஆப்ஷன் ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000 வரை உடனடி தள்ளுபடி உடன் மார்ச் 16 முதல் அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11 5G First Look Simple Design With Massive 9020mAh Battery All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X