முன்னாடி ரூ.30000 இப்போ ரூ.45000.. சைலன்ட் ஆக உயர்ந்த Laptop விலைகள்.. உடனே வாங்கலாமா, வெயிட் பண்ணலாமா?
இந்த மாசம் பட்ஜெட் கொஞ்சம் "டைட்" ஆகிடுச்சு.. அடுத்த பார்த்துக்கலாம் என்று - நீங்கள் ஒரு லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பை வாங்குவதை தள்ளிப்போட்டு கொண்டே இருந்தால், அதை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் லேப்டாப் விலைகள் ஏற்கனவே உயர்ந்து வருகின்றன.
மணிகண்ட்ரோலின் சமீபத்திய அறிக்கையின் படி, இந்த 2026 ஆம் ஆண்டில் லேப்டாப், டெஸ்க்டாப் விலைகள் 35 சதவீதம் வரை உயரக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கணித்து உள்ளனர். விலைகள் ஏன் உயர்கின்றன? எந்தெந்தப் பிரிவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும்? நீங்கள் உடனே ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமா அல்லது காத்திருக்க வேண்டுமா? இதோ பதில்கள்:

விலைகள் ஏன் உயர்கின்றன? இந்த விலை உயர்வுக்கு இரண்டு முக்கிய காரணிகள் தான் காரணமாகும்: ஒன்று - மிகவும் அதிகமான டிடிஆர் ரேம் விலைகள் (DDR RAM price hike) மற்றும் தொடக்க நிலை இன்டெல் ப்ராசஸர்களின் பற்றாக்குறை (shortage of entry-level Intel processors).
ரேம் விலைகள் ஏற்கனவே 2.5 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் விலைகள் இதுவரை சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இந்த மாதம் மேலும் 8 முதல் 10 சதவீதம் அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களுக்கும் - காம்போனென்ட் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் பட்சத்தில் மேலும் 10 சதவீதம் விலை உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று ஐடிசி இந்தியாவின் மூத்த சந்தை ஆய்வாளர் பரத் ஷெனாய் கூறுகிறார்.
இந்த விலை உயர்வால் எந்தெந்த லேப்டாப் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்படும்? என்ட்ரி லெவல் மாடல்கள் தான் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும். முன்பு ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை விற்கப்பட்ட லேப்டாப்கள் ஏற்கனவே ரூ.45,000-ஐ நெருங்கி வருகின்றன. என்ட்ரி லெவல் லேப்டாப்களின் இந்த விலை உயர்வானது மாணவர்கள், ஹோம் யூசர்கள் மற்றும் முதல் முறையாக லேப்டாப் வாங்குபவர்கள் ஆகியவர்களை கடுமையாக பாதிக்கும். பலர் லேப்டாப் வாங்குவதை இன்னும் அல்லது குறைவான அம்சங்கள் கொண்ட மாடல்களை தேர்வுசெய்யலாம்.
இந்த விலை உயர்வுக்கு மத்தியில் நீங்கள் இப்போதே புதிய லேப்டாப்பை வாங்க வேண்டுமா அல்லது சிறிது காலம் காத்திருக்கலாமா? உங்களுக்கு விரைவில் அல்லது உடனடியாக லேப்டாப் தேவைப்பட்டால், அதை முடிந்த வேகத்தில் வாங்குவது தான் இப்போதைக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும். ஏனென்றால் விலைகள் மேலும் உயரும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக இதுவரை அதிகரிக்கப்பட்ட விலையில் அதாவது "தற்போதைய விலையில்" ஒரு லேப்டாப்பை வாங்குவது புத்திசாலித்தனம். ஒருவேளை உங்கள் பட்ஜெட் இறுக்கமாக இருந்தால், உங்களால் இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க முடிந்தால் - காத்திருக்கவும். ஏனென்றால் லேப்டாப்களை "அணுகக்கூடியதாக வைத்திருக்க" பிராண்டுகள் ஏற்கனவே உள்ளமைவை சரிசெய்தல் மற்றும் இஎம்ஐ விருப்பங்களை ஆராய்ந்து வருகின்றன.
ஆனால் நீங்கள் ஒரு ஏஐ பிசி (AI PC) அல்லது ஹைர்-ஸ்பெக் மெஷின்களின் சந்தையில் இருந்தால், இப்போதே அவற்றை வாங்குவது நல்லது, ஏனெனில் இந்த பிரிவின் கீழ் உள்ள மாடல்கள் ஆனது மெமரி நெருக்கடியால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. ஆகவே உடனே செயல்படுவது நல்லது.
இந்திய பிசி சந்தை ஆனது 2025 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான ஆண்டாக இருந்தது, 15.9 மில்லியன் யூனிட்களை அனுப்பியது. இது ஆண்டுக்கு ஆண்டு 10.2 சதவீதம் அதிகரிப்பு ஆகும். ஆனால் இப்போது அதிகப்படியான விலைகள் ஆனது தேவையை பாதிக்கின்றன. இந்த சுமையை நுகர்வோர் பிரிவு தாங்குவதால், 2026 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7 முதல் 8 சதவீதம் வரை குறையும் என்றும் ஐடிசி எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications








