சாம்சங் - இரு 'ஜெ'கருவிகள் வெளியீடு..

By Meganathan
|

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஜெ5 மற்றும் ஜெ7 என இரு புதிய கருவிகளை முறையே ரூ.11,999 மற்றும் ரூ.14,999க்கு வெளியிட்டுள்ளது. செல்பீ எடுக்க சாதகமாக இருக்கும் இந்த கருவிகளின் விற்பனை ஜூலை மாதம் 24 ஆம் தேதி துவங்கும் என்றும் இதற்கான முன்பதிவுகள் ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று மாலை 4 மணி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் - இரு 'ஜெ' கருவிகள் வெளியீடு..

சாம்சங் கேலக்ஸி ஜெ5 மற்றும் ஜெ7 கருவிகள் கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு 5.1 மூலம் இயங்கும் இந்த கருவியில் டூயல் சிம் ஸ்லாட் மற்ரும் கருப்பு, வெள்ளை, மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கின்றது.

 சாம்சங் - இரு 'ஜெ' கருவிகள் வெளியீடு..

கேலக்ஸி ஜெ5 கருவி 5 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே எச்டி ஸ்கிரீன் 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 எஸ்ஓசி 1.5 ஜிபி ரேம். மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு 4ஜி, 3ஜி, ப்ளூடூத் வி4.1, வை-பை, என்எப்சி, போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கலும் 2600 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஜெ7 கருவியில் 5.5 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளதோடு 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் எக்சைனோஸ் 7580 பிராசஸர் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Samsung has launched the Galaxy J5 and Galaxy J7 in India, priced at Rs. 11,999 and Rs. 14,999 respectively.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X