61 ரூபாயில் 5G டேட்டா.! Jio அறிமுகம் செய்த புது திட்டம்.! அம்பானிக்கு பெரிய மனசு தான்.!

|

இந்தியாவில் ஏர்டெல் (Airtel) நிறுவனமும், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும் - அதனுடைய 5ஜி (5G) சேவையை அறிமுகம் செய்து, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு டெலிகாம் (Telecom) நிறுவனங்களும் இந்தியாவில் மிகவும் வேகமாக 5G சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.!

ரிலையன்ஸ் ஜியோ 5ஜியை மிகவும் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. அதேபோல், ஜியோ நிறுவனம் இப்பொழுது இந்தியாவில் 5G வேகத்தை (5G speed) இலவசமாக அனுபவிக்க அனுமதிக்கிறது. உங்களுடைய பேசிக் ரீசார்ஜ் திட்டம் (Jio Basic Recharge Plan), ஒரு 4ஜி (4G) திட்டமாக இருந்தாலும் கூட உங்களால் இப்போது 5G வேகத்தை அனுபவிக்க முடியும் என்பதே சிறப்பானதாக இருந்தது.

61 ரூபாயில் 5G டேட்டா.! Jio அறிமுகம் செய்த முதல் 5ஜி திட்டம்.!

ஆனால், இப்பொழுது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக முதல் 5G திட்டத்தின் விலையை (Jio 5G Recharge Plan Price) அறிவித்துள்ளது. இன்று நிறுவனம் அறிமுகம் செய்த திட்டத்தின் விலைப்படி, இனி ஜியோ பயனர்கள் வெறும் ரூபாய் 61 (Jio Rs 61 5G Data Plan) விலை முதல் 5G சேவையை அனுபவிக்க முடியும் என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் இப்பொழுது ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் மை ஜியோ ஆப்ஸ் (My Jio Apps) வழியாக ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. ஜியோ (Jio) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய 5G திட்டத்தின் நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் இந்த திட்டம் ஒரு டேட்டா பேக் (Jio Data Pack) திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆம், இது 5G சுவையைச் சுவைப்பதற்காக நிறுவனம் அறிமுகம் செய்துள்ள டேட்டா ஒன்லி பேக் திட்டம் (Jio Data Only Pack) ஆகும். இது 61 ரூபாய் விலையில் உங்களுக்கு 6 ஜிபி அளவிலான 5G டேட்டாவை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் - எந்த ஒரு வேலிடிட்டியுடன் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கான அர்த்தம், இந்த திட்டம் உங்களுடைய பேசிக் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

61 ரூபாயில் 5G டேட்டா.! Jio அறிமுகம் செய்த முதல் 5ஜி திட்டம்.!
.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பின்படி, ரூபாய் 239 விலைக்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் - இப்போது இந்தியாவில் ஜியோ 5ஜி கிடைக்கும் இடங்களில் தாராளமாக 5G சேவையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலைக்கு கீழே உள்ள கட்டணங்களில் ரீசார்ஜ் செய்த பயனர்களுக்காக, இந்த ரூபாய் 61 டேட் பேக் திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உதாரணமாக ரூபாய் 119, ரூபாய் 149, ரூபாய் 179, ரூபாய் 199, மற்றும் ரூபாய் 209 விலையில் ரீசார்ஜ் செய்த பயனர்கள் இனி இந்த 61 ரூபாய் டேட் பேக்கை ரீசார்ஜ் செய்து 5G சேவையை அனுபவிக்கலாம். ஜியோ 5ஜி (Jio 5G) சேவையை பயன்படுத்த உங்களுக்கு நிறுவனம் வழங்கும் வெல்கம் ஆபர் இன்வைட் (Jio 5G Welcome Offer Invite) தேவைப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

Jio நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய டேட்டா பேக் திட்டம் உங்களுக்கு வாய்ஸ் கால்ஸ் நன்மையோ அல்லது எஸ்.எம்.எஸ் நன்மைகளையோ வழங்காது என்பதையும் கருத்தில் கொள்ளவும். இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் இப்பொழுது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும்; மை ஜியோ ஆப்ஸ் வழியாகவும் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. 5ஜி வேகத்தை அனுபவிக்க நினைத்தால், உடனே இந்த திட்டத்தை யூஸ் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Launches India’s First 5G Data Pack At Rs 61 With 6GB Benefit

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X