Home
News

BSNL-க்கு கோடி கும்பிடு.. பண்டிகை பம்பர் ஆஃபர்.. ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிரடி கூடுதல் சலுகை.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் (bsnl) ஹோலி பண்டிகையை முன்னிட்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் ஹோலி (Holi) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.997 prepaid plan) ஆனது முன்பு 150 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 14 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 164 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

BSNL-க்கு கோடி கும்பிடு.. ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிரடி கூடுதல் சலுகை!

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் மொத்தமாக 328ஜிபி டேட்டாவை பெறமுடியும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதுவும் பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சலுகை வரும் மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில பட்ஜெட் விலை திட்டங்களையும்இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

BSNL-க்கு கோடி கும்பிடு.. ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிரடி கூடுதல் சலுகை!

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மை கிடைக்காது.

அதேபோல் பிஎஸ்எனஎல் நிறுவனம் தற்போது இந்தியாவில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Announces Extra Validity on Rs. 997 Prepaid Plan for Holi: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X