Home
News

ஏர்டெல் ரீசார்ஜ் பண்ண போறீங்களா? 56 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. இதோ சூப்பரான திட்டங்கள்..

ஜியோ (jio), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய ப்ரிபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 மற்றும் மற்றும் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரீசார்ஜ் பண்ண போறீங்களா?  இதோ சூப்பரான திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.

அதுவும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதுவும் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஏர்டெல் ரீசார்ஜ் பண்ண போறீங்களா?  இதோ சூப்பரான திட்டங்கள்..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ், ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.838 மற்றும் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans with 56 days validity and unlimited benefits in March 2026: check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X