Home
News

அம்பானிக்கு கும்பிடு.. அடுத்த 84 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1000 எஸ்எம்எஸ்கள்.. உடனே இதை பண்ணுங்க!

ஜியோ (Jio) நிறுவனத்தில் வாய்ஸ் கால்களை (Voice Calls) மட்டுமே கொண்ட திட்டங்களில் 3 மாத வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களை தவிர வேறு சலுகைகள் கிடைக்காது. ஆனால், டேட்டா இருக்கும் திட்டத்தைவிட மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த மூன்று மாத வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோவில் 2 வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒரு திட்டம் ரூ.1748 விலைக்கு 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதற்கு அதிக வேலிடிட்டி கிடைத்தாலும், பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு பொருத்தமாக இல்லை. ஆகவே, அடுத்த இருக்கும் ரூ.448 திட்டமானது அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

அம்பானிக்கு கும்பிடு.. அடுத்த 84 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

ஜியோ ரூ 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): இதில் மொத்தமே 4 சலுகைகள் மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் (Unlimited Local, STD, Roaming Calls) சலுகை கிடைக்கும். மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும். இந்த சலுகைகளை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். 28 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு கிடைக்கிறது.

மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்து உள்ளது. மூன்று மாதங்களுக்கு மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சிம் ஆக்டிவ் மலிவான விலைக்கு கிடைக்கும். செகண்டரி சிம் கார்டுகளுக்கு இந்த திட்டம் பக்காவாக இருக்கும்.

இதைவிட மலிவான விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது. சொல்லப்போனால், ஜியோ நிறுவனத்தில் கிடைக்கும், ஆரம்ப விலை திட்டமாகவும் இது இருக்கிறது. இது வேல்யூ திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இது வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடையாது. லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும், திட்டமாக இருக்கிறது.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு டேட்டா சலுகை கிடைக்கும். ஆனால், இதை தினசரிக்கு பயன்படுத்த முடியாது. மொத்தமாகவே 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆகவே, 28 நாட்களுக்கு மொத்தமாக 2 ஜிபி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும்.

இந்த போஸ்ட் டேட்டாவை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு மீதமுள்ள வேலிடிட்டி நாட்கள் வரையில் பயன்படுத்தலாம். அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்காது. 28 நாட்களுக்கும் சேர்த்து 300 மட்டுமே கொடுக்கப்படும். இதையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். 28 நாட்களுக்கு முன்பாக முடிந்துவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி அனுப்பி கொள்ளலாம்.

மேலும், முந்தைய திட்டத்தில் கிடைத்த ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இதைவிட மலிவான விலைக்கு திட்டங்கள் கிடையாது. ஆகவே, சிம் ஆக்டிவ் மட்டுமே விரும்பும் கஸ்டமர்கள் இந்த திட்டங்களை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 448 Voice Only Plan 84 Days Validity 1000 SMS Check Jio Cheapest 3 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X