ரிலையன்ஸ் டிடிஎச் - ஏர்டெல் டிடிஎச், எது பெஸ்ட்.? சபாஷ் சரியான போட்டி.!

இலவச வெல்கம் ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஜியோ இப்போது இந்தியாவில் டிடிஎச் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

|

சமீபத்தில், ரிலையன்ஸ் அதன் டிடிஎச் சேவையை நாட்டில் வெளியிட திட்டமிட்டுள்ள செய்தியை நாம் அறிவோம். ஆனால் இப்போது வரையிலாக டிடிஎச் சேவை சார்ந்த எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் ரிலையன்ஸ் ஜியோ வெளியிடவில்லை. என்றபோதிலும் கூட டிசம்பர் இறுதிக்குள் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தொலை தொடர்பு துறைக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு அலைகளை உருவாக்கிய ஜியோ சேவைகள் இப்பொது டிடிஎச் சேவைக்குள் நுழைவு இங்கும் அதன் முதல் எதிரியாய் ஏர்டெல் டிடிஎச் எதிர் நிற்கும். இப்படியான ஒரு வியாபார மோதலில் எது நிலைக்கும் எது பலமானதாக திகழும்..? ஏர்டெல் டிடிஎச் சேவையா.? அல்லது ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவையா.?

மலிவான திட்டங்கள்

மலிவான திட்டங்கள்

ஆதாரங்களின் படி, ரிலையன்ஸ் ஜியோ அதன் மாதாந்திர டிடிஎச் சேவையை மதிப்பின்படி பரவலாக ரூ.185/-ல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் டிடிஎச் சேவையோடு இதனை ஒப்பிடும்போது ஏர்டெல் சாதாரண திட்டங்கள் ரூ.300/-ல் இருந்து தொடங்கும். மற்றும் இந்தியாவில் ஏர்டெல் டிடிஎச் சேவை அதிக செலவிலான டிடிஎச் சேவையாகவும் கருதப்படுகிறது.

மலிவான டிடிஎச் சேவை.?

மலிவான டிடிஎச் சேவை.?

வெளியான வதந்திகள் உண்மையெனில், ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை தான் இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஏர்டெல் டிடிஎச் கடுமையான போட்டியை சந்திக்கும்.

நம்பிக்கை இல்லாத நிலை

நம்பிக்கை இல்லாத நிலை

மறுபக்கம் ஏர்டெல் டிடிஎச் எதிராக செய்லபட பாரிய அளவிலான இந்திய மக்களை கவர வேண்டிய கட்டாயத்தில் ஜியோ உள்ளது. ஏனெனில் அதன் இலவச சேவைகளை தவிர்த்து 4ஜி சேவைகளை கருத்தில் கொண்டால் மக்கள் ஏற்கனவே ஜியோ சேவையில் நம்பிக்கை இல்லாத நிலையில் தான் உள்ளன உடன் அரிதாகவே குரல் அழைப்புகளும் இணைக்கப்படுகின்றன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மூன்று மாத இலவச சேவை

மூன்று மாத இலவச சேவை

ஜியோ 4ஜி சேவைகளை போன்றே ஜியோ டிடிஎச் சேவையம் மூன்று மாதங்களுக்கு இலவச சேவையாக பயனர்கள் அனுபவிக்கும் வண்ணம் வெல்கம் ஆஃபர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ஜியோ அதே வரவேற்பு வாய்ப்பில் தங்கள் பிராட்பேண்ட் சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

வரும் மாதங்களில்

வரும் மாதங்களில்

ஆதாரங்களின் படி, ரிலையன்ஸ் வரும் மாதங்களில் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் டிடிஎச் சேவையை வழங்க ஆரம்பிக்கும். ஏர்டெல் ஏற்கனவே அதன் டிடிஎச் சேவையின் மூலம் நாட்டில் பரவலாக சிறந்த டிடிஎச் சேவையாக கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மலிவு விலையில் 4ஜி போன் அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ விலை ரூ.1,000 தான்.!!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio DTH vs Airtel DTH: Will the New Entrant Give Tough Competition? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X